Spotlightதமிழ்நாடு

வங்கக்கடலில் தீவிரமடையும் பெதாய் புயல்!

வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 14ம் தேதி மாலை முதல் 16ம் தேதி இரவு வரையிலான காலக்கட்டத்தில் தமிழக கடற்கரையில் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், இதனால் 12ம் தேதி முதல் மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் முன்னதாகவே தெரிவித்திருந்தது.

இதனையடுத்து தற்போது, இது குறித்து தனியாா் வானிலை ஆய்வாளா் கூறுகையில், “இந்த புயல் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே கரையை நெருங்கும். கரையோரங்களில் சுமாா் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்” என்று கூறியுள்ளார்.

இதன் காரணமாக வருகிற 15ம் தேதியும், 6ம் தேதியும் சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர பகுதியிலும், தெற்கு ஆந்திராவிலும் பலத்த மழையும், ஒரு சில இடங்களில் மிக பலத்த மழையும் பெய்யும். மேலும், அலை சீற்றத்தினாலும் காற்றினாலும் மீனவா்களின் படகுகள் ஒன்றோடு ஒன்று உரசி சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

Facebook Comments

Related Articles

Back to top button