
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி இந்த வார இறுதியில் சன்டே சினி காம்போவில் ‘யானும் தீயவன்’ மற்றும் ‘பறந்து செல்ல வா’ ஆகிய 2 திரைப்படங்களை ஒளிபரப்ப உள்ளது.
2 வெவ்வேறு கதை அம்சங்களைக் கொண்ட இதில், ஒன்று அதிரடி திரில்லர், மற்றொன்று காதல்-நகைச்சுவை நிறைந்த திரைப்படங்களை ஒளிபரப்ப உள்ளது. 2 படங்களையும் செப்டம்பர் 26, 2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 12.30 மணி மற்றும் மாலை 3.30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.
யானும் தீயவன் என்னும் திரைப்படம் கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த அதிரடி கிரைம் திரில்லர் திரைப்படம் ஆகும். இதை புதிய இயக்குனர் பிரசாந்த் ஜி சேகர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் அஸ்வின் ஜெரோம், வர்ஷா பொல்லம்மா மற்றும் ராஜு சுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதையானது ஒரு இரக்கமற்ற தொடர் கொலைகாரனைப் பற்றியதாகும். அவனுடைய கொடூரமான குற்றங்களை பார்த்த ஜோடி ஒன்றை அவன் கடத்துகிறான். அவனிடம் இருந்து அந்த ஜோடி எப்படி தப்பியது என்பதே படத்தின் கதையாகும். இந்த படம் மிகவும் விறுவிறுப்பு நிறைந்த படமாக எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பறந்து செல்ல வா என்னும் திரைப்படம் கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த காதல் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படம் ஆகும். இந்த படத்தை தனபால் பத்மநாபன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் லுத்புதீன், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நரேல் கெங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஒரு அழகான காதலியை கண்டுபிடிக்க முடியாமல் தனது நண்பர்களால் கேலி மற்றும் கிண்டலுக்கு ஆளாகும் ஒரு அழகான இளைஞன் சம்பத்தை (லுத்புதீன்) பற்றியதாகும். சம்பத் தனது ‘கெத்’தைக் காட்ட ஆன்லைனில் ஒரு கற்பனையான காதலியை உருவாக்குகிறான்.
இதற்கிடையில், அவனது பெற்றோர் அவனுக்கு மாதவி (ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்) என்ற பெண்ணை திருமணம் செய்ய திட்டமிடுகின்றனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக ஒருவருக்கொருவர் அன்பை வளர்க்கிறார்கள். அப்போது சம்பத்தின் கற்பனை கதாபாத்திரம் அவனது வாழ்க்கையில் திடீரென நுழைகிறாள். இதன் காரணமாக அவனது வாழ்க்கையில் பல்வேறு திருப்பங்கள் ஏற்படுகிறது. மீதமுள்ள கதை அவனது வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கிறது என்பதை பற்றியதாகும்.
இந்த 2 திரைப்படங்களையும் ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் 12.30 மணி மற்றும் மாலை 3.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





