Spotlightசினிமா

விக்ரம் பிரபு நடிக்கும் ‘டாணாக்காரன்’!!

 

‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’ ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘டாணாக்காரன்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் தமிழ் இயக்குகிறார். இவர் இயக்குநர் வெற்றிமாறனிடம் ‘விசாரணை’, ‘வடசென்னை’, ‘அசுரன்’, ‘விடுதலை’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர்.

இந்தப் படத்தில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். நாயகியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். இவர் ‘நெடுநல்வாடை’ என்ற படத்தில் நாயகியாக நடித்தவர். இவர்களுடன் லால், எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

‘டாணாக்காரன்’ படம் குறித்து இயக்குநர் தமிழ் கூறியதாவது: “ போலீஸ் பயிற்சியில் உள்ள வாழ்க்கையை சொல்லும் படம் இது. கல்லூரி மாணவர்களுக்கு நிகராக போலீஸ் பயிற்சியில் சேரும் மாணவர்களின் வாழ்க்கையிலும் பல சுவாரஸ்யங்கள் உண்டு. வழக்கமான போலீஸ் படமாக இல்லாமல் வித்தியாசமான கோணத்தில் இந்தப் படம் இருக்கும். எனக்கு ஏராளமான போலீஸ் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னிடம் பகிர்ந்த அனுபவங்களை சினிமாவுக்காக சில மாற்றங்கள் செய்து அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படியான பொழுதுப்போக்கு படமாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையான உழைப்புக் கொடுத்து நடித்துள்ளார் விக்ரம் பிரபு. இந்தப் படம் விக்ரம் பிரபு சினிமா கேரியரில் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும். இந்தப் படத்தின் படப்பிடிப்பை வேலூர் மாவட்டத்தில் ஒரே கட்டமாக நடத்தி முடித்தோம். தற்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகளும் முடிவடைந்துள்ளதால் படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்” என கூறினார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. பல லட்சம் பார்வையாளர்களை சென்றடைந்துள்ள டீசரை பாராட்டி சினிமா துறையினரும், ரசிகர்களும் படக்குழுவை பாராட்டி வருகின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: தமிழ்

ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம்

இசை: ஜிப்ரான்

பாடல்கள்: சந்துரு

படத்தொகுப்பு: ஃபிலோமின் ராஜ்

கலை: ராகவன்

சண்டைக்காட்சி: சாம்

நடனம்:ஷெரீப்

தயாரிப்பு நிர்வாகம்:ராஜாராம், சசிகுமார்

மக்கள் தொடர்பு:ஜான்சன்

தயாரிப்பு: ‘பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ்’ எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, பி.கோபிநாத், ஆர்.தங்க பிரபாகரன்.

Facebook Comments

Related Articles

Back to top button