
நீண்ட நாள் திருமணமாகாத 80’s Kids நாயகனுக்கு திடீரென்று காதல் கைகூட, சந்தோஷத்தில் திக்குமுக்காடும் நேரத்தில் அவன் காதலிக்கும் பெண்ணின் செயலால் திருமணம் நின்று போகிறது.
மனமுடைந்த நாயகன் என்ன ஆனான் என்பதையும் மீண்டும் தடைபட்ட திருமணம் நடந்தேறியதா என்பதையும் திருமணமாகாத 80 “s kids இளைஞர்கள் படும்பாட்டை முழுக்க முழுக்க நகைச்சுவையோடு கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும் படம் தான் ”கால் கேர்ள்”.
இத்திரைப்படத்தில் நாயகனாக ஆதேஷ் பாலாவும் நாயகியாக ஜெசியும் மற்றும் சிரிக்கோ உதய், லொள்ளுசபா புகழ் சதீஷ், வெங்கட்ராஜ், நாதஸ்வரம் புகழ் சுதா புஷ்பா, அபர்னா, சாதுவன் நடித்துள்ளனர்.
பாபு.கே.செல்வராஜன் ஒளிப்பதிவில் S.சதீஷ்குமார் இசையில் ஸ்ரீராம் விக்னேஷ் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தினை இயக்குனர் விஜய் மணி இயக்கியிருக்கிறார்.
பூஜாலட்சுமி பிலிம்ஸ் சார்பில் வி.சாதுவன் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ள நிலையில், விரைவில் இப்படம் திரை விருந்தாக வரவிருக்கிறது.