
மிகப்பெரிய கூட்டுக் குடும்பத்தில் பிறந்தவர் சிவகார்த்திகேயன். இவர் சின்ன வயதிலேயே தனது அப்பா சமுத்திரக்கனியை இழந்து விடுகிறார்.
தனது தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் உலகம் என நினைத்து வாழ்ந்து வருகிறார். தனது தங்கைக்காக எதையும் செய்யக் கூடிய பாசக்கார அண்ணன் தான் அவர்..
அண்ணனுக்கு ஏற்றாற் போல் தங்கை ஐஸ்வர்யா ராஜேஷும் தனது அண்ணன் மீது அவ்வளவு பாசமாக இருக்கிறார்.
பெரியப்பா, சித்தப்பா என அனைவரும் இருந்தும் ஆதரவு இல்லாமல் இருக்கிறார் சிவகார்த்திகேயன்…
திருமணம் தள்ளிக் கொண்டே செல்ல, ஒரு கட்டத்தில் வெறுத்துபோன ஐஸ்வர்யா ராஜேஷ் நட்டியை திருமணம் செய்ய ஒத்துக் கொள்கிறார். தனக்கு விருப்பம் இல்லை என்றாலும் தங்கையின் விருப்பத்திற்காக நட்டியை திருமணம் செய்து வைக்கிறார் சிவகார்த்திகேயன்.
திருமணத்திற்கு பிறகு நட்டியின் வில்லத்தனம் ஆரம்பமாகிறது… அண்ணனாக சிவகார்த்திகேயன் என்ன செய்தார் என்பது படத்தின் மீதிக் கதை….
அண்ணனாக சிவகார்த்திகேயன் இப்படத்தில்.வாழ்ந்திருக்கிறார். வழக்கமான டைமிங் காமெடி, எமோஷன்ஸ், காதல், பாசம் என அனைத்திலும் தனது ஸ்கோரை முந்தைய படத்தில் இருந்து உயர்த்திருக்கிறார். இப்படத்திற்கு பிறகு ஒரு அண்ணனாக இன்னும் பல தங்கை ரசிகைகளை கவர்வார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயனுக்கு போட்டி போட்டு நடித்திருக்கிறார் தங்கையாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ். அண்ணனுக்காக மாமனிடம் பெண் கேட்க செல்லும் காட்சியில் நல்ல ஸ்கோர் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா..
நடிகை அனு இமானுவேல் அழகாக, சிவகார்த்திகேயனுக்கு ஏற்ற ஜோடியாகவும் வந்து செல்கிறார்.
சூரியும், படத்தில் அவரது மகனாக நடித்த சிறுவன் (இயக்குனர் பாண்டிராஜ்’ன் மகன்) இருவரும் படத்திற்கு பெரிய தூண்களாக நிற்கின்றனர்.
பல படங்களுக்குப் பிறகு சூரியின் காமெடி இப்படத்தில் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியுள்ளது…
மற்றபடி, பாரதிராஜா, சமுத்திரக்கனி, ஆர் கே சுரேஷ், வேலா ராமமூர்த்தி, சுப்புபஞ்சு, ரெஜித் மேனன், அர்ச்சனா, சிரிப்பு போலீஸ், சண்முகராஜா, முத்துராமன் ஆகியோர் தனது கதாபாத்திரத்தை மீறாமல் நடித்துள்ளனர்.
வில்லனாக. நட்டியின் கதாபாத்திரம் மிரட்ட வைத்திருக்கிறது…
இமான் இசையில் அண்ணன், தங்கை பாடல், மயிலாஞ்சி பாடல்கள் கேட்கும் ரகம்… பின்னனி இசையில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்..
நிரவ் ஷா ஒளிப்பதிவு கலர்புல்..
பாண்டிராஜ்ஜின் இயக்கத்தில் மற்றுமொரு குடும்ப படம் என்றாலும், கடைக்குட்டி சிங்கம் போல் இல்லையே என்ற ஒரு ஏக்கத்தை உருவாக்கி விடுகிறது…
நம்ம வீட்டுப் பிள்ளை – இந்த வீட்டுப் பிள்ளையை குடும்பங்கள் கொண்டாடும்….



