Spotlightசினிமா

விபத்தில் சிக்கி ஓய்வெடுக்கும் மஞ்சிமா மோகன்!

டக்கன் செல்பி என்ற மலையாள படத்தில் நிவின் பாலி ஜோடியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். அதன் பிறகு தமிழில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் தமிழில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

தற்போது, துக்ளக் தர்பார், எப் ஐ ஆர் என்ற இரு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், விபத்து ஒன்றில் சிக்கி பலத்த காயம் அடைந்த மஞ்சிமா மோகன் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

எனது வாழ்க்கையில் இந்த மாதிரியான வலிகளை அனுபவித்தது இல்லை. என்னுடைய வேலைகளை (சினிமா) செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. விரைவில் இதிலிருந்து மீண்டு வருவேன்.’ என்று கூறியுள்ளார் மஞ்சிமா மோகன்.

Facebook Comments

Related Articles

Back to top button