Spotlightசினிமா

ராசியில்லாத பிக்பாஸ்; PUBG-யை நம்பியிருக்கும் ஐஸ்வர்யா தத்தா

இதுவரை தமிழகத்தில் பிக்பாஸ் 3 சீசன்கள் நடைபெற்றுள்ளது.

ஆனால் இதில் கலந்துக் கொண்ட எவருக்கும் சினிமாவிலும் சரி டிவியிலும் சரி பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.

யாருக்குமே கிடைக்காத புகழ் ஓவியாவுக்கு கிடைத்திருந்தாலும் அவருக்கும் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவிலை.

ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோர் ஒரு சில படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன.

ஆரவ் நடித்த மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படமும் தோல்வியை தழுவியது.

சினேகன், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துவிட்டார்.

2ஆவது சீசனில் கலந்து கொண்ட 17 போட்டியாளர்களில் யாஷிகா ஆனந்த், மகத், ரித்விகா ஆகியோர் மட்டுமே ஓரிரு படங்களில் நடித்து வருகின்றனர்.

இதில் நடிகை ஐஸ்வர்யா தத்தாவுக்கு 2 ஆண்டுகளாக எந்த படமும் வெளியாகவில்லை.

தற்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் PUBG என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தை அவர் பெரிதும் நம்பியிருக்கிறாராம்.

Bigg Boss fame Aishwarya thatha upcoming movie PUBG updates

Facebook Comments

Related Articles

Back to top button