
உலகம் முழுவதும் கொரோனாவால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர கொரோனாவால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்திலும், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
அதிலும், சென்னையின் நிலைமை சற்று கவலைக்கிடம் தான். நெருக்கடியான பகுதியான சென்னையில் மக்கள் அதிகமாக வசிப்பதால் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்தது. இதனால், பிழைக்க சென்னை தேடி வந்த மக்கள் பலர், உயிர் பிழைத்தால் போதும் என்று சென்னையை விட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர்.
இதனை மையமாக கொண்டு, தொகுப்பாளரும் நடிகருமான கதிர் ‘சென்னை நம் அன்னை’ என்ற தலைப்பில் குறும்படத்தை உருவாக்கியுள்ளார்.
இது மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. பால சரவணன், கயல் சந்திரன், பிவேக் பிரசன்னா, காளி வெங்கட் என பலரும் இதற்கு வரவேற்பு அளித்துள்ளனர்.
பல இன்னல்களை கடந்து கம்பீரமாக எழுந்து நிற்கும் சென்னை விரைவில் கொரோனாவை வென்று மீண்டு வரும் என்பது பலருடைய கனவாக இருந்து வருகிறது. நிச்சயமாக மீளும்.





