
சென்னை பாரிஸ் பகுதியில் கானா பாடல் பாடி வரும் நாயகன் ஜெயராஜ் (சந்தானம்). இதனாலே இவருக்கு பாரிஸ் ஜெயராஜ் என்ற பெயர்.
இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இவர், கானா பாடல்கள் பாடி பலரிடமும் நல்ல அறிமுகமாக இருக்கிறார். சந்தானத்தின் தந்தையாக வருகிறார் வக்கீலான ப்ருத்வி ராஜ்.
திருமணமானவர்களை சட்டப்படி பிரித்து வைப்பதும், காதலர்களை மறைமுகமாக பிரித்து வைப்பதும் என தொழிலை செய்து வருகிறார் ப்ருத்வி ராஜ்.
எதிர்பாராத விதமாக, மகனின் முதல் காதலையே ப்ருத்விராஜ் பிரித்து வைக்கிறார். சந்தானத்திற்கு இரண்டாவது காதல் கைகூட, இடைவேளையில் வருகிறது மிகப்பெரும் ட்விஸ்ட். அதன் பிறகு நடக்கும் அமலிகளே படத்தின் மீதிக் கதை.
’ஏ1’ படத்தில் கொடுத்த நடிப்பை இப்படத்திலும் தெளிவாக கொடுத்திருக்கிறார் சந்தானம், டான்ஸ், ஆக்ஷன், காமெடி என அனைத்து ஜானரிலும் கலக்கியிருக்கிறார்.
நாயகி, அனைகா சோட்டியின் நடிப்பு பெரிதாக இல்லை என்றாலும், அழகாக வந்து செல்லும் தேவதையாக இருக்கிறார்.
படத்தின் மிகப்பெரும் பலமாக வந்தவர் சந்தானத்தின் தந்தையாக வந்த ப்ருத்வி ராஜ் தான். இரண்டாம் பாதி முழுவதும், அவரை வைத்து பயணித்து காமெடியை வாரி இறைத்திருக்கிறார்கள்.
இவருக்கு பக்க பலமாக பயணம் செய்திருக்கிறார்கள் மொட்டை ராஜேந்திரனும், லொள்ளு சபா மாறனும்.
இவர்கள் அடிக்கும் அரட்டைகள் திரையரைங்கை விழுந்து விழுந்து சிரிக்க வைத்து விடுகிறார்கள்.
ஏ1 படத்தின் ஹிட்டை தொடர்ந்திருக்கிறார் இயக்குனர் ஜாண்சன். சந்தோஷ் நாராயணனின் இசை மிகப்பெரும் பலம். படம் முழுவதும் கானாவால் குதுகலமாகின்றனர் ரசிகர்கள். சென்னை ரசிகர்களுக்கு ஓகே, ஆனா, மற்ற்ற ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது சிறிது சந்தேகம் தான்.
ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு கலர் புஃல்… வித்தியாசமான பார்வை கொண்டு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இரண்டாம் பாதியில் இருந்த கலகலப்பு முதல் பாதியில் மிஸ்ஸிங்..
நாட்டாமை படத்தில் வந்த ஒரு காமெடி காட்சியை வைத்து படம் முழுக்க சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஜாண்சன்.
பாரிஸ் ஜெயராஜ் – கலகலப்புக்கு பஞ்சமில்லை…
தயாரிப்பு: லார்க் ஸ்டூடியோஸ் கே குமார்
வெளியீடு: 11:11 ப்ரொடக்ஷன்ஸ்





