Spotlightசினிமா

விஷாலுக்கு தேசிய விருது கிடைப்பது உறுதி – தயாரிப்பாளர் ரமணா!

விஷால் நாயகனாக நடிக்க ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லத்தி. வரும் 22ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

அறிமுக இயக்குனர் ஆர்.வினோத் குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

நான்கு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஓய்வு காவல்துறை அதிகாரி ஜாங்கிட் அவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நடிகர் விஷால் பேசும்போது,

லத்தி திரைப்படம் நான்கு மொழிகளில் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகிறது. முதலில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய விழாவில் நான் வழக்கமாக செய்யும் செயல் இது. சால்வையும், மலர்க்கொத்தும் சிறிது நேரம் மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் வீண் விரய செலவு. அந்த பணத்தில் இரண்டு குழுந்தைகளின் படிப்பு செலவிற்கு கொடுப்பது வழக்கம். இன்றும் அதைத்தான் செய்திருக்கிறேன்.

ஜாங்கிட் சாருக்கு கான்ஸ்டபிள் சல்யூட் செய்கிறேன். பல நூறு குற்றங்களை உங்களுடைய அனுபவத்தில் சந்தித்திருக்கிறீர்கள்.

லோகேஷ் கனகராஜ் விஜய்யை இயக்குவதைக் கண்டு பொறாமையாக இருக்கிறது. நானும் விரைவில் விஜய்யிடம் கதை சொல்லி இயக்குவேன்.

லத்தி படத்தின் இயக்குனர் வினோத் 8 நாட்களில் என்னிடம் சம்மதம் வாங்கிவிட்டார்.  கதை கேட்டு முடித்ததும் நான் என்ன உணர்ந்தேனோ அதை பார்ப்பவர்களும் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

படப்பிடிப்பில் வேண்டுமென்றே அடிவாங்கவில்லை. சரியாக கட்டி முடிக்காத கட்டிடத்தில் நடக்கக் கூடிய சண்டைக் காட்சிகள். 80 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அடிப்படுவதை தவிர்க்க முடியவில்லை. பீட்டர் ஹெயினின் பணியைக் கண்டு வியந்தேன்.

இப்படத்தில் இரண்டு பேர் பேசப்படுவார்கள். ஒருவர் யுவன் சங்கர் ராஜா, இரண்டாவது பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் பேசப்படுவார். நான் எந்த வண்டியில் சென்றாலும் பொன்.பார்த்திபனையும் அழைத்து செல்வேன்.
கலை இயக்குர் கணேஷுக்கு முக்கியமாக நன்றி கூற வேண்டும்.

ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து புரட்சி தளபதி வாழ்க என்று சொல்ல வேண்டாம்.. நான் தளபதி அல்ல, புரட்சி தளபதியும் அல்ல. என் பெயர் விஷால் அவ்வளவு தான். ” என்றார்.

தொடர்ந்து இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறை அதிகாரி ஜாங்கிட் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று இப்படம் வெற்றி பெற தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

ஓய்வு காவல்துறை அதிகாரி ஜாங்கிட் பேசும்போது,

இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. பொதுவாக சினிமாவில் கதாநாயகர்கள் பெரிய பதவியில் இருக்கும் கதாபாத்திரத்தைத் தான் விரும்புவார்கள். ஆனால், காவல்துறைக்கு நல்லப் பெயரோ கெட்டப் பெயரோ ஒரு கான்ஸ்டபிள் பொதுமக்களிடம் நடந்துகொள்ளும் விதத்தில் தான் கிடைக்கும். நிஜத்தில் ஒரு கான்ஸ்டபிளாக இருப்பது எளிதல்ல அவருக்கு பல சவால்கள் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை முதன்முறையாக ஹீரோவாக தேர்ந்தெடுத்து நடித்த விஷாலுக்கு நன்றி.

தயாரிப்பாளர் ரமணா பேசும்போது,

சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெயினுக்கு மிகப் பெரிய நன்றி. இரண்டாவது பாதியில் 45 நிமிடங்கள் சண்டைக் காட்சிகள் இருக்கும். புலிமுருகனுக்கு தேசிய விருது வாங்கினேன். அதன்பிறகு இப்படத்திற்கு வாங்கப் போகிறேன் என்று கூறினார். 5 மாதங்கள் விடாமுயற்சியாக உழைத்து சண்டைக் காட்சிகளை இயக்கிக் கொடுத்தார்.

இப்படத்தை முழுதாக பார்த்த பீட்டர் ஹெய்ன், நான் தான் தேசிய விருது வாங்குவேன் என்று நினைத்திருந்தேன். ஆனால், இறுதிக் காட்சிகளில் விஷாலின் நடிப்பைப் பார்த்ததும் அவருக்குத் தான் கிடைக்கும் என்றார். அவன் இவன் படத்திற்கு பிறகு விஷால் சாரின் நடிப்பை இப்படத்தில் பெரிதாக பேசுவார்கள் என்றார்.

என்னை ஊக்கப்படுத்தி நடிக்க வைத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. என்னையும் நந்தாவையும் தயாரிப்பாளர்களாக உருவாக்கிய என் நண்பன் விஷாலுக்கு நன்றி.” என்றார்.

Facebook Comments

Related Articles

Back to top button