Spotlightவிமர்சனங்கள்

மிஸ் யூ – விமர்சனம் 2.5/5

இயக்குனர் என் ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த், ஆஷிகா ரங்கநாத், கருணாகரன், பாலசரவணன், லொல்லு சபா மாறன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் மிஸ் யூ.

படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கே ஜி வெங்கடேஷ். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

7 MILES PER SECOND சார்பில் சாமுவேல் மேத்யூ படத்தினை தயாரித்திருக்கிறார்.

கதைக்குள் பயணித்து விடலாம்…

தனது மகன் மீது போலீஸில் கொடுத்திருக்கும் புகாரை திரும்ப பெறும்படி சித்தார்த்திடம் கூறுகிறார் மினிஸ்டர். வாபஸ் வாங்க முடியாது என்று கூறி சித்தார்த் விடாப்படியாக இருக்கிறார்.

இதனால் கோபமடைந்த மினிஸ்டர், சித்தார்த் மீது லாரியை வைத்து அடித்து தூக்குகிறார். பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் சித்தார்த்.

இந்த விபத்தால், கடைசி இரண்டு வருடங்களில் தனது வாழ்க்கையில் நடந்தவற்றை முழுவதுமாக மறந்து விடுகிறார் சித்தார்த்.

தொலைதூர பயணத்திற்காக செல்லும் வழியில் எதேச்சயாக கருணாகரனை சந்திக்கிறார். அவரிடம் நட்பு ஏற்பட, சித்தார்த்தை கருணாகரன் பெங்களூர் அழைத்துச் செல்கிறார்.

அங்கு, காதலி ஆஷிகாவை சந்திக்கிறார் சித்தார்த். அவரை கண்டதும் அவர் மீது காதல் வயப்படுகிறார் சித்தார்த். தனது காதலை அவரிடம் சொல்கிறார். ஆனால், ஆஷிகா அதை ஏற்க மறுக்கிறார்.

தனது தாயிடம் சென்று ஆஷிகாவை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறுகிறார் சித்தார்த். ஆஷிகாவை ஏற்க மறுக்கிறார் சித்தார்த்தின் தாயார். வாழ்க்கையில் மறதியில் விடுபட்ட இரண்டு வருடத்தை நண்பர்கள் மூலம் கேட்டறிகிறார் சித்தார்த்.

காதலிப்பதாக கூறிய ஆஷிகா தான் தான் வெறுத்த மனைவி என்று அதன்பிறகு தான் தெரிகிறது சித்தார்த்திற்கு… அதன்பிறகு கதையில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

வழக்கமான நடிப்பை இப்படத்திலும் கொடுத்திருக்கிறார் நடிகர் சித்தார்த். முதலில் கதாபாத்திரமாக சித்தார்த்த் இருப்பதை மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், கதை நகர நகர படத்திற்குள் நம்மையும் இழுத்துக் கொண்டு சென்றுவிட்டார் சித்தார்த். ஒரு சில இடங்களில் சற்று ஓவர் ஆக்டிங் எட்டிப் பார்த்ததையும் சகித்துக் கொள்ள முடியவில்லை.

ஹீரோயின் ஆங்காங்கே நன்றாகவே ஸ்கொர் செய்திருக்கிறார். காட்சிகளில் அளவாகவும் நடித்து நம்மை கவர்ந்திருக்கிறார். திரைக்கதையில் இன்னும் சற்று நன்றாகவே வேலை பார்த்திருக்கலாம்.

நானி நடிப்பில் வெளிவந்த ஹாய் நன்னா திரைப்படத்தின் சாயல் படத்தில் நன்றாகவே தெரிகிறது. கருணாகரனின் நடிப்பில் எந்தவித ஈர்ப்பும் இல்லை.

பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருந்தாலும், திரைக்கதையில் பெரிதான ஒரு ஈர்ப்பு இல்லாததால் நம்மை சற்று சோதித்திருக்கிறது இந்த மிஸ் யூ.

மிஸ் யூ – கவரவில்லை

Facebook Comments

Related Articles

Back to top button