Spotlightவிமர்சனங்கள்

ட்யூட் – விமர்சனம் 3.5/5

றிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமீதா பைஜு, சரத்குமார், ரோஹினி உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ட்யூட்.

படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

சாய் அபயங்கர் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

தனது எக்ஸ் காதலிக்கு திருமணம் என்றதும், அந்த திருமண நிகழ்வில் சென்று பிரச்சனை செய்து போலீஸாரால் அங்கிருந்து அழைத்துச் செல்லப்படுகிறார் பிரதீப் ரங்கநாதன். இந்த நிகழ்வில் இருந்து படத்தின் கதை ஆரம்பமாகிறது.

பிரதீப் ரங்கநாதனின் மாமாவும் பால்வளத்துறை அமைச்சருமான சரத்குமாரின் மகளாக வருகிறார் மமிதா பைஜு. இவரே, பிரதீப்பை ஜெயிலில் இருந்து அழைத்துச் செல்கிறார்.

சிறுவயதிலிருந்தே பிரதீப்பும் மமீதாவும் நல்லதொரு நட்பில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், மமீதாவிற்கு பிரதீப் மீது காதல் வர, காதலை பிரதீப்பிடம் சொல்கிறார்.

ஆனால், உன்னை நட்பாகத் தான் பார்ப்பதாகக் கூறி, மமீதாவின் காதலை நிராகரிக்கிறார் பிரதீப். இதனால், மனமுடைந்த மமீதா வெளிநாடு சென்று விடுகிறார். மமீதாவின் பிரிவு பிரதீப்பிற்கு காதலை கொண்டு வருகிறது.

அதன்பிறகு, சரத்குமாரிடம் தனக்கு மமீதா மீது காதல் வந்துவிட்டதாகவும் உடனே திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிடவும் என்றும் கூறுகிறார் பிரதீப்.

இதனால், துள்ளிக் குதிக்கும் சரத்குமார் உடனே திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். திருமணத்திற்கு வெளிநாட்டில் இருந்து வருகிறார் மமீதா. திருமண ஏற்பாடு நடைபெற்று வரும் சமயத்தில், காதல் தோல்வி இருந்த சமயத்தில் தனது கல்லூரி நண்பனான ஹரிது ஹாரோனை காதல் செய்து விடுகிறார்.

இந்த காதல் விஷயத்தை பிரதீப்பிடம் கூற, அதன் பிறகு நடந்த அதிரிபுதிரி சம்பவங்களே படத்தின் மீதிக் கதை.

படத்தின் மொத்த எனர்ஜியாக இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். படத்தின் கதைக்கு இப்படியான நடிகர் இருந்தால் மட்டுமே அது கைகொடுக்கும் என்று சரியாக நடிகரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர்.

ஒவ்வொரு காட்சியிலும் படம் பார்க்கும் ரசிகர்களை எண்டர்டெயின்மெண்ட் ஆக வைத்திருக்கிறார். சின்ன சின்ன இடங்களில்கூட, சிரிக்க வைத்தும், எமோஷ்னலாக கனெக்ட் ஆக வைத்தும் இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

நடிப்புக்கு நடிப்பு அழகுக்கு அழகு என தன் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் மமீதா பைஜூ. பிரதீப் ரங்கநாதனுக்கும் மமீதாவிற்குமிடையேயான கெமிஸ்ட்ரி படத்தில் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.

எப்போதும் முரட்டுத் தனமாக தன்னைக் காட்சிப்படுத்திக் கொண்டிருந்த சரத்குமாருக்கு இப்படம் பெரும் ரிலாக்சேஷன் தான். காமெடி, எமோஷ்னல், வில்லத்தனம் என அனைத்திலும் புகுந்து விளையாடியிருக்கிறார்.

படத்தில் தோன்றிய மற்ற கதாபாத்திரங்களும் தங்களது வேலைகளை சரியாக செய்திருக்கிறார்கள்.

கதையை மிக அழகாக நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர். இரண்டாம் பாதியில் பாதிக்கும் மேல் கதை சற்று தொங்கிச் சென்றாலும், க்ளைமாக்ஸில் கச்சிதமாக அதனை கையாண்டு ஜெயித்திருக்கிறார்.

சாய் அபயங்கரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டும் படத்திற்கு பக்க பலமாக வந்து நிற்கிறது.

மொத்தத்தில்,

டியூட் – தீபாவளி எண்டர்டெயினர்..

Facebook Comments

Related Articles

Back to top button