Spotlightசினிமா

மீண்டும் பாலாவோடு கைகோர்க்கும் சூர்யா!

கடந்த 20 ஆம் தேதி சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘காப்பான்’. பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப் போற்று என்னும் படத்தில் நடித்து வந்த சூர்யா, நேற்றோடு இப்படத்தின் படப்பிடிப்பையும் முடித்து விட்டார்.

இந்நிலையில், சூர்யாவை அடுத்து இயக்கப் போகும் இயக்குனர் யார் என்ற கேள்வி தான் கோலிவுட்டை வலம் வரும் செய்தியாக இருக்கிறது.

சூர்யாவின் நந்தா, பிதாமகன் படங்களை இயக்கிய பாலாவோடு தான் மீண்டும் சூர்யா இணையவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவோடு அதர்வாவும் இதில் நடிப்பார் என்றும் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button