
இயக்கம்: கலையரசன் தங்கவேல்
நடிகர்கள்: ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர் ஜே விக்னேஷ் காந்த், ஷீலா, ஜென்சன் திவாகர், ஏ வெங்கடேஷ்
தயாரிப்பாளர்: வெடிக்காரன் பட்டி எஸ் சக்திவேல்
இசை: சித்து குமார்
ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம்
கதைப்படி,
படத்தின் ஆரம்பத்திலேயே மாளவிகாவை பெண்பார்க்கச் செல்கிறார் ரியோ. இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போக, பெற்றோர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. அழகாக சென்று கொண்டிருக்கும் இவர்களதுமண வாழ்க்கையில், அவ்வப்போது சின்ன சின்ன சண்டை வந்து கொண்டிருகிறது.
சின்ன சின்ன ஈகோ சண்டை பெரிதாக மாறுகிறது. இந்த சண்டை இறுதியில் விவகாரத்தில் சென்று முடிகிறது. தன்னால் விவாகரத்து கொடுக்க முடியாது என்று ஒற்றைக் காலில் நிற்கிறார் ரியோ. இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

இந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு அதாவது 2கே கிட்ஸ்க்கு ஏற்றவாறு கதையை நன்றாகவே நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர். சமூக வலைதளங்களில் அவர்களுக்குள் இருக்கும் ஈர்ப்பு, பெண்ணியவாதம் உள்ளிட்ட பலவற்றை அவர்கள் புரிந்துவைத்திருக்கும் மனப்பான்மை என நிகழ்கால சம்பவங்கள் அனைத்தையும் படத்திற்குள் வைத்து கதையை நன்றாகவே கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.
ரியோ மற்றும் மாளவிகா இருவரும் நிஜ தம்பதிகள் போன்று தோன்றும் அளவிற்கான நடிப்பை வாரிக் கொடுத்திருக்கிறார்கள். விக்னேஷ் காந்த் இந்த படத்தில் தான் நடித்திருக்கவே செய்திருக்கிறார் என்று சொல்லுமளவிற்கு, செண்டிமெண்ட் காட்சிகளில் கண்கலங்க வைத்திருக்கிறார். மேலும், ஷீலா, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட நடிகர்களும் தங்களது நடிப்பை அளவாக கொடுத்திருக்கின்றனர்.
இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டுமெ படத்திற்கு பெரும் பலமாக நிற்கிறது.
மொத்தத்தில்,
ஆண்பாவம் பொல்லாதது – வெற்றிக் கோட்டையில் மகுடம் சூட்டிக் கொண்டது..





