Spotlightசினிமாவிமர்சனங்கள்

ஆயிரம் பொற்காசுகள் விமர்சனம் 3.25/5

அறிமுக இயக்குனர் ரவி முருகையா இயக்கத்தில் விதார்த், சரவணன், அருந்ததி, ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த ஆயிரம் பொற்காசுகள்.

படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜோகன், ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பானு முருகன்.

தஞ்சாவூர் அருகே ஒரு கிராமத்தில், வாழ்ந்து வருகிறார் சரவணன்., திருமணம் முடிக்காமல் சோம்பேறித்தனமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவரோடு வந்து சேர்கிறார் சரவணனி தங்கை மகனான விதார்த்.

கிராமம் முழுவதும் டாய்லெட் கட்ட சொல்லி அரசாங்கம் சொல்ல, அதற்காக மானியம் கிடைக்கும் என்பதால் சரவணனும் டாய்லெட் கட்டுவதற்கு குழி தோண்டுகிறார். குழி தோண்டா ஜார்ஜ் வருகிறார்.

ஜார்ஜ் குழி தோண்டும்போது அங்கு ஆயிரம் பொற்காசுகள் அடங்கிய ஒரு பானை கிடைக்கிறது. அதை, விதார்த், சரவணனோடு சேர்ந்து பங்கு போட நினைக்கிறார் ஜார்ஜ்.

பங்கு பிரிக்கப்பட்டதா.? யாருக்கெல்லாம் பொற்காசுகள் கிடைத்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

விதார்த், சரவணனும் தங்களுக்கு கொடுக்கப்பட்டதை செய்திருக்கிறார்கள். படத்தின் பலம் என்றால் அது ஜார்ஜும் ஹலோ கந்தசாமியும் தான். தங்களால் முடிந்த வரை காட்சிகளுக்கு உயிர் கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கூட காமெடியை சிதறவிட்டுச் சென்றிருக்கிறது. முதல் பாதி ஏனோதானோவென்று செல்ல, இரண்டாம் பாதி வேகமெடுக்கிறது ரசிக்க வைக்கிறது.
சின்னதொரு கதை என்றாலும் அதை திரைக்கதையில் ரசனையாக்கி படைத்திருக்கிறார் இயக்குனர்.

படத்தின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம். இறுதி வரை சிரிப்பலையில் திரையரங்கமே அதிர வைத்துவிட்டார்கள் படக்குழுவினர். இந்த வருடத்தின் காமெடி படங்களில் சிறந்த படமாக இப்படம் நிச்சயம் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

குடும்பத்தோடு ஒருமுறை நிச்சயம் விசிட் அடிக்கலாம்…

ஆயிரம் பொற்காசுகள் – காமெடி கலாட்டா…

Facebook Comments

Related Articles

Back to top button