
இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உருவாகி வரும் படம் தான் “ஏகே 61”. படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக பல பகுதிகளில் நடந்து வருகிறது.
படத்திற்கான எந்த அப்டேட் இல்லாமல் ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் இருக்க, அஜித்குமார் தனது பைக்கில் பல ஊர்களில் பயணம் புரிந்து வருகிறார்.
ட்ராவல் விரும்பியான அஜித்குமார், அவ்வப்போது இப்படி பைக்கில் ஊர் சுற்றுவது வழக்கமான ஒன்று தான். இந்நிலையில், தற்போது கூட ஒரு நீண்ட பயணத்தில் தனது இருசக்கர வாகனத்தில் ட்ராவல் செய்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து இவரது பயண புகைப்படங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
நேற்றைய தினமும் அஜித்குமார் தனது விலையுயர்ந்த இருசக்கர வாகனத்துடன் இருக்கும்படியான புகைப்படம் வெளியானது.
அஜித்குமார் இந்த இரு சக்கர வாகனமான ”BMW R 1250 GS ADVENTURE” 2019 ஆம் ஆண்டு அவரது பெயரிலேயே வாங்கியுள்ளார். இவரது வாகன எண் TN 07 CU 2577.
இவ்வாகனத்தின் வாகன காப்பீடு அதாவது இன்சூரன்ஸ் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதியோடு காலாவதியாகியுள்ளது.
தற்போது இது பெரும் சர்ச்சயை எழுப்பியுள்ளது.
சாதாரண எளிய மக்கள் அவர்களின் வாகனத்தை காப்பீடு செய்யவில்லை என்றால் காவல்துறையால் பாய்ச்சப்படும் சட்டம், ஒரு பிரபலம் என்றால் பாயாது என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மாநிலம் மாநிலமாக இன்சூரன்ஸ் இல்லாத வாகனத்தில் ட்ராவல் செய்து வரும் அஜித்குமார் மீது இதுவரை எந்த போக்குவரத்துத் துறையும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்காதது அதிர்ச்சயளிக்கும்படியாக உள்ளது.
வாகன காப்பீடு இல்லாமல் ஒரு வாகனத்தை ஓட்டுபவர், ஏதாவது விபத்தை ஏற்படுத்தினால், வாகன ஓட்டுநர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத மோட்டார் வாகனச் சட்டப்படி வழக்கு பதியப்படலாம் என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.