போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிக்கு தயாராகி வருகிறது மாதவன் நடிக்கும் மாறா. இப்படத்தினை ப்ரொமோத் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இது குறித்து தயாரிப்பு நிறுவனம் கூறுகையில், ஆர் மாதவன் மற்றும் ஸ்ரதா ஸ்ரீநாத் நடிப்பில் எங்களது தயாரிப்பில் உருவாகி வரும் மாறா படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஆரம்பிக்கும் முன்பே முடிக்கப்பட்டுவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
விரைவில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மற்றும் பின்னனி இசை கோர்ப்பு வேலைகள் துவங்கப்படவிருக்கின்றன. அரசு அறிவித்தபடி கொரோனா பாதிப்பு ஏற்படாதவாறு மிகுந்த பாதுகாப்போடு எங்கள் பணிகளை நாங்கள் துவங்கவிருக்கிறோம்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்பத்திற்கு இசையமைக்கிறார். தாமரை படத்தின் பாடல்களை எழுதியுள்ளார். இணையத்தில் வெளியான கல்கி படத்தினை இயக்கிய திலீப் குமார் இப்படத்தினை இயக்கியுள்ளார்.
மேலும், படத்தின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என படத் தயாரிப்புக் குழு தெரிவித்துள்ளது.