
ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ராட்சசன்’. விஷ்ணு விஷால், அமலா பால் நடித்திருக்கும் இந்த திரில்லர் படத்தை முண்டாசுப்பட்டி வெற்றிப்படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
படத்தின் விழாவில் பேசிய நடிகை அமலாபால், ‘ இப்படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் கூற வரும்போது எனக்கு சரியாக புரியவில்லை. பின், விஷ்ணு விஷால் கதையை முழுவதும் எனக்கு விவரமாக கூறினார்.
இப்படத்தின் எனக்கான காட்சிகள் ரொம்ப கம்மியா இருக்குதே என இயக்குனரிடம் கேட்டேன். அதற்கு அவர், ஒரு சில காட்சிகள் வந்தாலும் வலுவான இடத்தில் தான் வருவார் என்று கூறினார். அதுபோல், படத்தில் எனது கதாபாத்திரமும் பேசும்படியாக தான் இருக்கும்.
த்ரில்லர் படம் என்றாலே ஹாலிவுட்டுடன் ஒப்பிடுவார்கள், ஆனால் இது நம்ம ஊரு திரில்லர் படம் என்று சொல்லும் அளவுக்கு நேட்டிவிட்டியுடன் இருக்கும். திரில்லர் படங்களில் இது ஒரு பெஞ்ச்மார்க்காக இருக்கும்” என்று கூறினார்.