Spotlightவிமர்சனங்கள்

அக்னி தேவி விமர்சனம் 2.5/5

பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன் மற்றும் மதுபாலா நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது ‘அக்னி தேவி’.

விறைப்பான போலீஸ் உயரதிகாரியாக வருகிறார் பாபி சிம்ஹா. பேருந்து நிலையத்தில் இளம் பெண் ஒருவர் இளைஞன் ஒருவனால் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு பாபி சிம்ஹாக்கு வருகிறது.

வழக்கு அடுத்தடுத்த கட்டத்திற்கு நகரும் போது பல திடுக்கிடும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. இதற்கு பின்புலமாக இருப்பது தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராக வரும் மதுபாலா. மதுபாலாவிற்கும் பாபி சிம்ஹாவிற்கும் நடக்கும் யுத்தமே இந்த ‘அக்னி தேவி’.

வழக்கமான பாணியில் பாபி சிம்ஹாவின் நடிப்பு, இப்படத்திலும் கொடுத்திருப்பது சூப்பர். ஒரு போலீஸ் அதிகாரிக்கு உரித்தான மிடுக்கான நடிப்பில் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார் பாபி. என்ன… குரல் தான் அவரோடது இல்லன்னு மட்டும் தெளிவா தெரியுது.

ரோஜா படத்தில் பார்த்த நாயகியா இவர் என ஆச்சர்யபட வைக்கிறார் மதுபாலா. வில்லத்தனத்திற்கு பல நாட்கள் பயிற்சி எடுத்திருப்பார் போல, ஆனால் அது என்னவோ பலனிளிக்காமல்போனது தான் மிச்சம். நாடகத்தன்மையாகவே இருந்தது அவரது காட்சிக்கு பலவீனம். இவரது கேரக்டர் ஒரு பிரபல அரசியல்வாதியை உங்கள் கண்முன் கொண்டுவரும்.

நாயகி ரம்யா நம்பீசனுக்கு மொத்தமே மூன்றே காட்சிகள் தான். சதீஷின் காமெடி ஆங்காங்கே மட்டுமே எடுபட்டிருக்கிறது.

கதையின் கருவை தெளிவாக எடுத்த இயக்குனர், அதை திரைக்கதை அமைக்கும் விதத்தில் கோட்டை விட்டுவிட்டார். அதிலும் இரண்டு சண்டைக் காட்சிகள் ‘யப்பா… இந்த பைட் சீன்ல அடிக்கிறது பாபி சிம்ஹாவே இல்லப்பா’ என அங்கேயே குரல் எழுப்ப வைக்கிறது.

அக்னி தேவி – ஏற்கனவே கோடை வெப்பத்தை தாங்க முடியல. இதுல………

Facebook Comments

Related Articles

Back to top button