Spotlightவிமர்சனங்கள்

ஆல்பா – விமர்சனம்

கதை சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கிறது. ஐரோப்பாவின் பனிமலை பிரதேசத்தில் வாழ்ந்து வரும் ஒரு இனத்தர், வேட்டையாடுவதை ஒரு தொழிலாக வைத்திருக்கின்றனர். அதிலும் காட்டெருமைகளை வேட்டையாடுவதில் மிகவும் கைதேர்ந்தவர்கள்.

ஒருமுறை, வேட்டைக்குப் புறப்பட்டுச் செல்கிறது அவ்வினத்திலிருந்து ஒரு குழு. முதன்முறையாக கதாநாயகனும் அவர்களோடு பயணிக்கிறான். எதிர்பாராத திருப்பங்கள் சிலவற்றால், அவன் காயப்பட்டு மயக்க முறுகிறான். அவன் இறந்துவிட்டதாகக் கருதி, இதர வேட்டைக்காரர்களோடு சேர்ந்து அவனது தந்தையும், தம் பயணத்தைத் தொடர்கிறார்கள்.

மயக்கத்திலிருந்து விழித்தெழும் நாயகன், நடந்து முடிந்துவிட்ட விபரீதத்தை எண்ணி அதிர்ச்சிக்குள்ளாகிறான். தனிமையில் வாடுகிறார்.

ஓநாய் கூட்டத்தில் சிக்கிக் கொள்ளும் நாயகன், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு ஓநாயை கத்தியால் குத்தி விடுகிறார். ஓநாய் கூட்டம் ஓடி விட, உயிருக்கு போராடும் ஓநாய்க்கு உயிர் கொடுக்கிறார் நாயகன். இந்த பாசத்தை வைத்து, ஓநாயும் நாயகனோடு பயணிக்கிறது.

பல ஆபத்துகள் இருவரையும் தாக்குகின்றன. ஆபத்துகளை கடந்த இருவரின் கடைசி நிலை என்ன என்பதே மீதிக் கதை ….

இப்படத்தில் கோடி ஸ்மிட் – மெக்பீ(Kodi Smit- McPhee), லியானோர் வரேலா, ஜென்ஸ் ஹல்டன் மற்றும் ஜோஹனஸ் ஹெளகுர் ஜோஹனசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜோசப் எஸ். டிபீலி இசையமைக்க Martin Gschlacht ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நாயகன் கதைக்கு ஏற்ற பொருத்தம்தான். ஓநாயும் நாயகனும் மட்டுமே அதிகப்படியான காட்சிகள் வந்து சென்றனர். காட்சி அமைப்புகளும், நடக்கும் சம்பவங்களும் மீண்டும் மீண்டும் காண்பிப்பது போரடிக்க வைத்து விட்டது.

ஏற்கனவே வந்து சென்ற கதையாதலால், கதையின் மீது ஈர்ப்பு மிக குறைவு தான்,

ஓநாய்க்கும் கதாநாயகனுக்குமான நட்பு காட்சிகளில், ஒரு நெருக்கம் இல்லாதது படத்திற்கு சற்று பின்னடைவு தான்

Facebook Comments

Related Articles

Back to top button