சினிமா

41 வயது நடிகை.. நடிகரின் 25 வயது மகன்; இது எப்படி இருக்கு!

ர்ச்சைகளுக்கும் கிசுகிசுக்களுக்கும் பாலிவுட் என்றுமே குறை வைத்ததில்லை. பிரபல நடிகர்கள், நடிகைகள் மட்டுமல்லாது அவர்களின் வாரிசுகளும் இதில் சிக்காமல் இருந்தது இல்லை.

அப்படியாக பாலிவுட் திரையுலகில் நீண்டகாலமாக அசத்தி வரும் ஹீரோக்களில் நடிகர் அமீர்கானும் ஒருவர். அமீர்கான் 1986 ஆம் ஆண்டு ரீனா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜுனைத் என்ற மகன் உள்ளார்.

15 ஆண்டுகள் இன்பமாக வாழ்ந்த இருவர் 2002 ஆம் ஆண்டில் இருவரின் விருப்பத்திற்கேற்பவும் விவாகரத்து பெற்றனர். இரண்டு ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்த அமீர்கான் 2005 ஆம் ஆண்டில் கிரண் ராவ் என்ற பெண்ணை மறுமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்பு தன் முதல் மனைவியின் மகனான ஜுனைதீன் பிறந்தநாள் வந்தது. அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அமீர்கான் ஜுனைத்தை வலைத்தளங்களில் கலாய்த்துள்ளார். ஒரு போட்டோவில் ஜூனைத்தும், பிரபல பாலிவுட் நடிகையான ராணி முகர்ஜியும் ஒன்றாக உள்ளனர்.

அதில் ராணி முகர்ஜி மிகவும் இன்புற்றவாறு உள்ளார். இந்த போட்டோவை அப்லோட் செய்த அமீர்கான், ஜுனைத் ராணி முகர்ஜியை எவ்வாறு கவர்ந்து இழுத்தான் என்பது தெரியவில்லை. நான் கூட இவ்வாறு ராணி முகர்ஜியை கவர்ந்து இழுக்க முடியவில்லை என்று பதிவு செய்தார்.

தன் மகனை இவ்வாறு கலாய்த்துள்ளாரே என்று நெட்டிசன்கள் வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close