Spotlightவிமர்சனங்கள்

அனபெல் சேதுபதி – விமர்சனம் 1.5/5

அறிமுக இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் (நடிகரும் இயக்குனருமான சுந்தர்ராஜன்) இயக்கத்தில் விஜய் சேதுபதி, டாப்சி பன்னு, ஜார்ஜ் மரியன், மதுமிதா, சுப்பு பஞ்சு அருணாசலம், யோகி பாபு, சேத்தன், ராதிகா, தேவதர்ஷினி, சுரேகா வாணி, ஜெகபதிபாபு நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் இந்த “அனபெல் சேதுபதி”…

கதைக்கு போயிடலாம்..

ராஜாகாலத்து அரண்மனை ஒன்று பாலடைந்து இருக்கிறது. அந்த அரண்மனைக்குள் யாரெல்லாம் செல்கிறார்களோ பெளர்ணமி தினத்தன்று அவர்கள் இறந்து விடுகிறார்கள்… இறந்தவர்கள் அந்த அரண்மனைக்குள்ளே ஆவியாகவும் தங்கி விடுகிறார்கள். இதனால் அந்த அரண்மனை பக்கம் யாரும் செல்லவே அச்சப்படுகிறார்கள்..

இந்நிலையில் டாப்சி, ராதிகா, டாப்சியின் தந்தை, அவரது அண்ணன் என குடும்பமே திருட்டு தொழிலை செய்து வருகிறது.

அரண்மனைக்கு சொந்தகாரரான போலிஸ் ஒருவர், டாப்சி குடும்பத்தினரை அரண்மனைக்குள் தங்க வைக்கிறார்., அந்த அரண்மனைக்குள் பேய் இல்லை என்பதை ஊர் மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடை செய்கிறார் போலீஸ்காரர்.

அரண்மனைக்குள் சென்ற டாப்சி குடும்பத்தினர் உயிரோடு திரும்ப வந்தார்களா.? அந்த அரண்மனைக்கும் டாப்சிக்கும் என்ன சம்மந்தம் என்பதே படத்தின் மீதிக் கதை..

கதை பின்னோக்கிச் சுதந்திரத்திற்கு முன் செல்ல, அரண்மனையை தனக்கு ராணியாக வரும் அனபெல்(டாப்சிக்காக) கட்டுகிறார் விஜய்சேதுபதி..

மிகவும் பிரம்மாண்டமாகவும், அழகு கலைகளுடம் கட்டப்பட்ட அந்த அரண்மனையை வில்லனாக வந்த ஜெகபதி பாபு கைப்பற்ற நினைக்கிறார்..

விஜய் சேதுபதி & டாப்சியை விஷம் வைத்து கொல்கிறார் ஜெகபதி பாபு…

முன் இருந்த ஒரு நடிப்பின் ஈர்ப்பை, இப்படத்தில் விஜய் சேதுபதி கொடுக்காதது பெரும் ஏமாற்றம் தான். இரண்டாம் பாதியில் மட்டுமே வரும் விஜய்சேதுபதி, இறுக்கமான முகத்தோடு, ஏதோ கதாபாத்திரம் செய்ய வேண்டும் என்பதற்காக செய்தது போல் கேரக்டரை செய்துள்ளார்..

டாப்சி படத்தின் நாயகியாக தோன்றியுள்ளார். ஓகே தான்..

படம் முழுக்க வருவது யோகிபாபு மட்டும் தான்.. படத்தின் ஹீரோ இவர் தான் போல.. இவர் அடிக்கும் காமெடியில் நமக்கு எரிச்சல் தான் வருகிறது.

படத்தில், ஜார்ஜ் மரியன், மதுமிதா, சுப்பு பஞ்சு அருணாசலம், யோகி பாபு, சேத்தன், ராதிகா, தேவதர்ஷினி, சுரேகா வாணி என பலர் இருந்தும் காமெடிக்கு பெரும் போராட்டம் தான் நடக்கிறது.. குழந்தைகளுக்கான படம் என்று கூறி குழந்தைகளையும் தூங்க வைத்து விடுவார்கள் நம்மையும் தூங்க வைத்துவிடுவார்கள்..

அரண்மனை பிரம்மாண்டம் தான், ஆனால் அதை அடிக்கடி பிரம்மாண்டமாக காட்டியே நம்மை எரிச்சலடைய வைத்து விடுகிறார்கள்…

இசை: கிருஷ்ண கிஷோர் பின்னனி இசை ஓகே…

ஒளிப்பதிவு: ஜார்ஜ் கௌதம் ரகமா செய்துருக்காங்க..

ஒரு பெரிய இயக்குனரின் வாரிசு, தந்தையின் படங்களை பார்த்தாலே கதை, திரைக்கதையின் அனுபவம் நன்றாகவே கிடைத்திருக்குமே தீபக் சார்….

அனபெல் சேதுபதி – அணு அணுவா வச்சி செஞ்சிபுட்டாங்க…

Facebook Comments

Related Articles

Back to top button