Spotlightஇந்தியா

இரண்டாக உடைந்தது ஜம்மு-காஷ்மீர்… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமித்ஷா!

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க, பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

எனவே கூடுதல் படைகள் குவிக்கப் பட்டு வருவதால், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுமா? என்ற சந்தேகம் நிலவியது.

இந்நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் ஒமர் அப்துல்லா ,மெஹபூபா முப்தி ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப் பட்டுள்ளனர்.

வீட்டை விட்டு வெளியேற அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை 307-ஐ நீக்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், காஷ்மீரில் நடப்பது என்ன? அங்கு போர் சூழல் நிலவுவதால் அதுபற்றி விளக்க வேண்டும் என்றார்.

பின்னர் கடும் அமளிக் கிடையே, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 35ஏ மற்றும் 370வது சட்டப்பிரிவுகள் ரத்து செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக மாநிலங்களவையில் அமித்ஷா அறிவித்தார்.

குடியரசுத் தலைவரும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மத்திய அரசு இதற்கான அறிவிப்பாணையை வெளிட்டுள்ளது.

370வது பிரிவு ரத்து – அடுத்தது என்ன?

370வது பிரிவு ரத்தால் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் இனி ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும்.

பிற மாநில மக்களும் ஜம்மு-காஷ்மீரில் இனி அசையா சொத்துக்களை வாங்கலாம்..

வெளிமாநில ஆண்களை திருமணம் செய்தாலும் இனிமேல் ஜம்மு-காஷ்மீரில் அம்மாநில பெண்கள் சொத்துக்களை வாங்கலாம்.

370வது பிரிவு ரத்தால் ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைகளை இனி குறைக்கலாம், கூட்டலாம்..

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் 6லிருந்து 5 ஆண்டுகளாக மாறுகிறது..

பிரிக்கப்படுகிறது ஜம்மு-காஷ்மீர் மாநிலம்’

சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர் செயல்படும்; சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும் என்று அமைச்சர் அமித்ஷா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதனால், ஜம்மு – காஷ்மீரில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது…

Facebook Comments

Related Articles

Back to top button