Spotlightசினிமா

பகவான் பாலாஜியாக நடித்த ஆர்யன் ஷ்யாமிற்கு Young Superstar பட்டத்தை வழங்கிய திருப்பதி தேவஸ்தானம்!!

ர்யன் ஷ்யாம் நடித்த பிரம்மாண்ட நாயகன் படத்தைப் பார்த்த திருப்பதி தேவஸ்தான தலைவர் மற்றும் அவரது குழுவினர் படக்குழுவினரையும் இயக்குனர் பாம்பே ஞானத்தையும் பாராட்டியதோடு படத்தில் திருப்பதி சுவாமி ஸ்ரீவெங்கடாஜலபதியாக நடித்த ஆர்யன் ஷ்யாமை கட்டி பிடித்து பாராட்டி பகவான் பாலாஜியாகவே இந்தப் படத்தில் வாழ்ந்துக்காட்டியிருக்கிறீர்கள் அவரை திரைப்படம் மூலமாக தரிசனம் பண்ற பாக்கியத்தை கொடுத்திருக்கிறீர்கள்.

இப்படத்தில் விரதம் இருந்து நடித்ததாக செய்தி அறிந்தோம் மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு எங்களது தேவஸ்தான சாா்பில் youth Superstar என்ற பட்டத்தை தங்களுக்குவழங்கி மகிழ்கிறோம். என்று கூறியிருக்கிறார்கள். மேலும் ஆர்யன் ஷ்யாமுக்கு இது சம்பந்தமாக தேவஸ்தான தலைவர் துஷ்மந்த் குமார்தாஸ்பாராட்டி கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.

இந்தப்படத்தில் திருப்பதி ஸ்ரீவெங்கடாஜலபதியாக ஆர்யன் ஷ்யாம் நடித்திருக்கிறார் நடிகை அதிதி.மகாலட்சுமியாகவும் நடிகை சந்தியா பத்மாவதிதேவியாகவும் நடித்திருக்கிறார்கள் விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை எஸ். ஆனந்த்பாபு கவனிக்க இசையை திவாகர் சுப்பிரமணியம் அமைத்திருக்கிறார். இந்த பிரம்மாண்ட நாயகன்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் கலைமாமணி திருமதிபாம்பே ஞானம் சுப்பிரமணியம்.

இதற்கிடையில் ஆர்யன் ஷ்யாம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் AVM புரொடக்ஷன்ஸ் வழங்கும் அந்த நாள் படமும் தயாராகி விரைவில் வெளிவரவிருக்கிறது.

இந்தப் படம் அமானுஷ்யம் மற்றும் பிளாக் மேஜிக் கொண்ட சைக்கலாஜிக்கல் திரில்லர் படம்.

Facebook Comments

Related Articles

Back to top button