Spotlightசினிமா

என் நண்பனை இழந்து விட்டேனே!? விவேக் மறைவு குறித்து சீயான் விக்ரம்..!!

டிகர் சின்ன கலைவாணர் பத்மஸ்ரீ விவேக் இன்று (17/4/2021) காலை 4.30 மணியளவில் அகால மரணமடைந்தார். நேற்று ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியால் இன்று காலை இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவரது மறைவுக்கு திரையுலகினர் அனைவரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

அவரது இறப்பிற்கு நடிகர் சீயான் விக்ரம் இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில்,

”என் மேல் அளவற்ற அன்பு கொண்டவரும், எனது நெருங்கிய நண்பருமான மாபெரும் கலைஞன் விவேக்கின் மரண செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.

தனிப்பட்ட முறையில் எனக்கும், தமிழ் திரைப்பட உலகிற்கும் மாபெரும் இழப்பு.

அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.” என்று கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button