Spotlightசினிமாவிமர்சனங்கள்

2020 புத்தாண்டு விருந்து… அவனே ஸ்ரீமன் நாராயணா விமர்சனம் 3.25/5

1960 70 களில் நடக்கும் கதையாக இது படமாக்கப்பட்டுள்ளது. எனவே அந்த கால படங்களைப் போல் செஃபியா டோனில் படமாக்கியுள்ளனர்.

அமராவதி நகரில் இராமாயண நாடகம் அரங்கேற்ற குழு ஒன்று உள்ளது. அவர்களில் 6 பேர் ஒரு பெரிய புதையலை கொள்ளையடிக்கிறார்கள்.

அவர்கள் கொள்ளையடித்ததை அறிந்த தாதா அவர்களை கொன்று விடுகிறார். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். ஒருவர் இவரின் மனைவிக்கு பிறந்தவர். மற்றொரு மகன் வேலைக்காரியுடன் உடலுறவில் பிறந்தவர்.

இவர் இறக்கும் போது ஒரிஜினல் மகனிடம் எந்த காரணத்திலும் இன்னொரு மகனை கொன்றுவிட கூடாது என சத்தியம் வாங்கி செல்கிறார்.

அவரின் மரணத்திற்கு இருவரும் அரியணைக்கு அடித்துக் கொள்கிறார்கள். அதே சமயத்தில் புதையல் இடமும் இவர்களுக்கு தெரியவில்லை.

சில வருடங்களுக்கு பிறகு அமராவதி போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராக வரும் ரக்‌ஷித் ஷெட்டி புதையலை பற்றி அறிய முயற்சிக்கிறார்.

அவர் என்ன புதையலை அடித்தாரா? அண்ணன், தம்பி இணைந்தார்களா? ரக்‌ஷித் ஷெட்டிக்கும் புதையலுக்கு என்ன தொடர்பு? என்பதே மீதிக்கதை.

கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி தான் படத்தின் எல்லாம் எனலாம்.

ரொமான்ஸ் தவிர அனைத்தையும் செய்துள்ளார். இவர் நாயகியை லட்சுமி அவர்களே லட்சுமி அவர்களே என அழைக்கும் அழகே தனி. மரியாதை கொடுத்து அழைக்கும் புதிய பாணியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

காமெடி, ஆக்‌ஷன் என கலந்துகட்டி பட்டைய கிளப்பியிருக்கிறார்.

ஹீரோவாக இருந்தாலும் அடிக்கடி பல்பு நம்மை ரசிக்க வைக்கிறார். எல்லாரும் 1960 உடைகளில் இருக்க இவர் மட்டும் இன்றைய ட்ரெண்ட்டுக்கு ஏற்ப உடை அணிந்திருக்கிறார். அது மட்டும்தான் நெருடலாக உள்ளது.
நாயகி ஷான்வியும் சூப்பர். அழகாக அமைதியாக வந்து செல்கிறார்.

இவர்களுடன் பாலாஜி மனோகர், பிரமோத் ஷெட்டி, மதுசூதன் ராவ், அச்யுத் குமார், கோபால கிருஷ்ண தேஷ்பாண்டே ஆகியோரும் அசத்தல்.

படத்தை போராடிக்காமல் கொண்டு செல்வது பின்னணி இசை தான். அதை அஜனீஷ் லோக்நாத், சரண்ராஜின் பின்னணி இருவரும் நன்றாக செய்துள்ளார்.

ஓரிரு பாடல்களும் ரசிக்க வைக்கின்றன.

உல்லாஹ் ஹைதூரின் கலை பணிகள் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

அதுபோல் கரம் சாவ்லாவின் ஒளிப்பதிவு அமராவதி என்ற அருமையான கற்பனை பகுதியை கலர்புல்லாக காட்டியுள்ளது.

ரக்‌ஷித் ஷெட்டியும் திரைக்கதை எழுதியிருக்கிறார். கன்னட படத்தை பார்த்த உணர்வு இல்லாமல் தமிழ் பட உணர்வை தந்துள்ளனர்.

வசனங்களை தமிழ்படுத்தி இருக்கும் விஜயகுமாரும் நம்மை புரிந்து வைத்து அதற்கேற்ப வசனங்களை கொடுத்துள்ளார்.

அதுபோல் ரக்‌ஷித் ஷெட்டி இந்த பட டைட்டிலை அடிக்கடி சொல்லும் காட்சிகளும் சூப்பர்.

ஆக 2020 புத்தாண்டில் ரசிக்க ஒரு நல்ல படத்தை கொடுத்துள்ளனர் அவனே ஸ்ரீமன் நாராயணா படக்குழுவினர்.

Avane Srimannarayana review rating

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close