Spotlightசினிமா

பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்குள் போகும் நடிகர், நடிகைகள் யார் யார் தெரியுமா..??

பிரபல தனியார் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக வலம் வந்தது தான் பிக் பாஸ். இரண்டு சீசன்களை தொடர்ந்து மூன்றாவது சீசனுக்குள் அடியெடுத்து வைக்கப்போகிறது.

இரண்டு சீசனை நடத்தியது போல் இந்நிகழ்ச்சியையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். இதற்கான விளம்பரம் தொடர்பான படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை பூந்தமல்லியில் நடைபெற்றுள்ளது.

இந்த வருட நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள். ஜூன் முதல் நிகழ்ச்சி ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகைகள் சாந்தினி தமிழரசன், லைலா, சாக்‌ஷி அகர்வால், சுதா சந்திரன், நடிகர் மகேந்திரன் ஆகியோருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சித் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், சாந்தினி தமிழரசன் மட்டுமே தன்னை பிக் பாஸ் குழுவினர் அழைத்துள்ளதாகவும் எனினும் இறுதி முடிவை தான் கூறவில்லை என்றும் கூறியுள்ளார். இதர நடிகர்கள் இதுகுறித்து எதுவும் பேசவில்லை.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close