Spotlightஇந்தியாதமிழ்நாடு

108 எம்பி மெகா பிக்சலோடு வெளிவரும் மி மிக்ஸ் 4… விலை என்னன்னு தெரியுமா.??

சியோமி நிறுவனம் விரைவில் தனது புதிய மி மிக்ஸ் 4 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இந்த சாதனத்தை பற்றிய பல்வேறு குறிப்புகள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது,

சியோமி மி மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ்எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பினபு 1080 பிக்சல் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் இவற்றுள் இடம் பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

சியோமி மி மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் சேமிப்பு பொறுத்தவரை 6ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம்.

சியோமி மி மிக்ஸ் 4ஸ்மார்ட்போன் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி 108எம்பி+ 16எம்பி+ 12எம்பி என மூன்று ரியர் கேமரா மற்றும் 32எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளதுஇபின்பு வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் விலை 2 லட்சமாக தற்போது சீன மார்க்கெட்டில் களம் இறங்கியுள்ளது.

சில மாதங்களுக்குப் பிறகு இந்திய மார்க்கெட் வரும்போது இதன் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button