Spotlightசினிமா

இது கொஞ்சம் ஓவர்தான்….. விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இறைச்சி வியாபாரிகள் போராட்டம்!

விஜய் நடிக்க அட்லீ இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘பிகில்’. இப்படத்தினை வரும் தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன், பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

அமைச்சர்கள் சிலர் விஜய்யை நேரடியாகவே தாக்கி பேசி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கோயம்புத்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு, பிகில் திரைப்படத்தில் விஜய் இறைச்சி வியாபாரிகள் பயன்படுத்தும் கட்டையின் மீது கால் வைத்து போஸ்டர் வெளியிட்டுள்ளார்.

அது எங்கள் வியாபாரிகளை இழிவுபடுத்தும் செயலாக இருக்கிறது, என்று கூறி நடிகர் விஜய்யின் புகைப்படங்களை கிழித்து போராட்டம் நடத்தி வருகின்றனர் கோவை மாவட்ட இறைச்சி வியாபாரிகள் சிலர்.

எத சொல்லி போராட்டம் நடத்தலாம்ன்னு ரூம் போட்டு யோசிப்பாங்களோ

Facebook Comments

Related Articles

Back to top button