Spotlightசினிமா

பிகில் அதிகாலை காட்சிகள் ரத்து; கடுப்பில் ரசிகர்கள்; விழிபிதுங்கும் திரையரங்குகள்!

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கிறது ‘பிகில்’.

பிகில் உள்ளிட்ட அனைத்து திரைப்படத்திற்கும், தீபாவளியன்று சிறப்பு காட்சிகள் ஒளிபரப்ப அரசு அனுமதி வழங்கவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பிகில் டிக்கெட் விலை குறித்து கேட்டதற்கு, தீபாவளிக்கு ரிலீசாகும் எந்த படத்திற்கும் திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளை ஒளிபரப்ப தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.

மேலும், அரசு அனுமதிக்காத அந்த நேரங்களில் படத்தை ஒளிபரப்பு செய்தால் அந்த திரையரங்குகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

முன்னதாக, இரவு 12 மணி காட்சி, 1 மணி காட்சி, 2 மணி காட்சி, 3 மணி காட்சி என பல காட்சிகளை முக்கியமான திரையரங்குகள் ஏற்பாடு செய்து டிக்கெட்டுகளை விற்று தள்ளி விட்டன. இரவே பிகில் படத்தை பார்த்து விடலாம் என்று எண்ணியிருந்த ரசிகர்கள் இந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும், அதிக விலையில் ஏற்கனவே சில திரையரங்குகள் டிக்கெட்டுகளை விற்பனை செய்துவிட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள்.

Facebook Comments

Related Articles

Back to top button