Spotlightசினிமாவிமர்சனங்கள்

பொம்மை – விமர்சனம் 2.25/5

யக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, ப்ரியா பவானி சங்கர், ஷாந்தினி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் இந்த பொம்மை. சில வருடத்திற்கு முன்னாள் எடுக்கப்பட்ட திரைப்படம் அவசர தோனியில் இன்று வெளியாகியுள்ளது..

கதைப்படி,

சிறு வயதில் அம்மா இழந்த துக்கத்தை தாளாமல் இருந்த ராஜுவிற்கு வீட்டின் அருகில் இருக்கும் நந்தினி என்ற கேரக்டர் அவனுக்கு ஆறுதலாக இருக்கிறாள். நந்தினி தான் எல்லாமுமாய் இருக்கிறாள் ராஜுவிற்கு.

திருவிழா கூட்டத்தில் நந்தினியை தொலைத்து விடுகிறார் ராஜு. அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் மீண்டும் கவலையுற்று எதுவுமில்லாதது போல் நினைத்துக் கொள்கிறான் ராஜு. அழுத்தத்தில் இருக்கும் ராஜு ஒரு மருத்துவரை அணுகுகிறார்.

தினமும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார். வருடங்கள் உருண்டோட, ராஜுவான கேரக்டர் தான் எஸ் ஜே சூர்யா வருகிறார்.

பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டும் கம்பெனியில் பணிபுரிகிறார் எஸ் ஜே சூர்யா.

நிறைய பொம்மைகள் இருக்கும் அந்த கம்பெனிக்கு, ஒரு பொம்மை வருகிறது. அதில், உதட்டுக்கு கீழே பெரிய அளவில் மச்சம் இருப்பதை பார்க்கிறார். பார்த்ததும் அந்த பொம்மை மீது ஒரு விதமான ஈர்ப்பு ஏற்படுகிறது எஸ் ஜே சூர்யாவிற்கு.

காரணம் என்னவென்றால், சிறு வயதில் தொலைந்து போன நந்தினிக்கும் அதே போன்று அதே இடத்தில் மச்சம் இருக்கும்.

இந்நிலையில், அந்த பொம்மைக்கு வண்ணம் தீட்டி வைத்திருப்பார் எஸ் ஜே சூர்யா. மாத்திரை எடுத்துக் கொள்ளாத நாளன்று பொம்மையை பார்க்கும் போது அது எஸ் ஜே சூர்யாவின் கண்களுக்கு ப்ரியா பவானி சங்கராக (நந்தினி) தெரிகிறார்.

தினமும் மாத்திரைகளை உட்கொள்ளாமல், நந்தினியுடன் பேசிக் கொண்டும் உரையாடிக் கொண்டும் இருப்பார் எஸ் ஜே சூர்யா. (அவரின் இமேஜினேசனில்)

ஒருநாள் பொம்மையை விற்று விடுகிறார்கள். இதனால், வெறி பிடித்தவர் போல் சுற்றித் திரிகிறார் எஸ் ஜே சூர்யா.

வெறி பிடித்த எஸ் ஜே சூர்யா, அந்த பொம்மையை விற்ற கம்பெனி சூப்ரவைசர் ஒருவரை யாருக்கும் தெரியாமல் கொன்றும் விடுகிறார்.

கொலைக் குற்றவாளி யாரென்று தெரியாது தேடி அலையும் போலீஸிடம் எஸ் ஜே சூர்யா சிக்கினாரா.? பொம்மையை எஸ் ஜே சூர்யா கண்டு பிடித்தாரா.? கண்டுபிடித்து என்ன செய்தார்.? என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் மிகப்பெரும் பலம் எஸ் ஜே சூர்யா மட்டுமே. தனது முக எக்ஸ்ப்ரஷனில் நம்மை கட்டிப் போட்டு விடுகிறார். அந்த கேரக்டருக்கு என்ன தேவையோ அதை மட்டும் தெளிவாக புரிந்து கொண்டு நடித்திருக்கிறார். அதிலும், பொம்மை இல்லை என்றதும் அதற்கான தவிப்பு, போலீஸ் ஸ்டேஷனில் தனது காதலை இன்ஸ்பெக்டரிடம் அழுது கொண்டே கூறும் காட்சி என படத்தில் ஆங்காங்கே கைதட்டல் கொடுக்கக் கூடிய நடிப்பை நன்றாகவே கொடுத்திருக்கிறார் எஸ் ஜே சூர்யா.

ஆங்காங்கே ஒரு சில காட்சிகளில் மட்டுமே அழகு தேவதையாக கண்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார் ப்ரியா பவானி சங்கர். பல இடங்களில் சற்று ஓவர் ஆக்டிங்க் தான் எட்டிப் பார்த்துள்ளது.

சாந்தினிக்கு பெரிதான காட்சிகள் இல்லை என்றாலும், கொடுத்த காட்சியை அழகாக செய்து முடித்திருக்கிறார்.

ஒரு அழகான சைக்கோ த்ரில்லராக கொண்டு செல்ல வேண்டிய படத்தை, வேறு விதமாக இயக்குகிறேன் என்று ரசிகர்களை ரசிக்க வைக்க முடியாத ஒரு கதையாக கொண்டு வந்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராதா மோகன்.

ஒரு பரபரப்பான இடைவேளை காட்சி கொடுத்தால் மட்டுமே இரண்டாம் பாதிக்கான சுவாரஸ்யம் ஒட்டிக் கொள்ளும். ஆனால், இடைவேளை காட்சி அப்படியான எந்த ஒரு சுவாரஸ்யத்தை எந்த ஒரு பரபரப்பையும் கொடுக்காமல் போனது படத்திற்கு விழுந்த ஒரு மரண அடி தான்.

படத்தின் இரண்டாம் பாதி முழுவதையும் படம் பார்க்கும் ரசிகர்கள் இது தான் அடுத்து நடக்கும் என்று சொல்லும் அளவிற்கான காட்சிகளைத் தான் இயக்குனர் வைத்திருக்கிறார்.

உயரமான இடத்தில் தான் திருமணம் என்றதுமே, படத்தின் க்ளைமாக்ஸ் இப்படிதான் இருக்கும் என்று அறிந்து கொள்ள முடிந்தது.

ஆக மொத்தத்தில் பொம்மை – வலுவே இல்லாத கதையால் எடுக்கப்பட்ட வெத்து பொம்மை.

படத்தில் ஒரே ஒரு ஆறுதல் என்றால் அது, “தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் பாடும் ” என்ற இளையராஜாவின் பாடலை அதே சந்தத்தோடு கொடுத்தது மட்டுமே… அவ்வளவு அழகு.. அதிலும் ஒருகுறை என்றால் அந்த பாடலையும் முழுதாக கொடுக்காதது தான்..

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையா இது என்று சொல்லும் அளவிற்கு தான் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் இருந்தது.

Facebook Comments

Related Articles

Back to top button