Spotlightஇந்தியாதமிழ்நாடு

இன்றைய முக்கியச் செய்திகள் 27/03/2020…!

வங்கிகளில் வாங்கிய எந்த கடனுக்கும் மூன்று மாதம் EMI கட்ட தேவையில்லை கடன் வசூலிப்பை 3 மாதம் நிறுத்திவைக்க உத்தரவு இதனால் வாடிக்கையாளரின் சிபில் மதிப்பெண் பாதிக்கப்பட கூடாது – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ்.

COVID-19 கொசுக்கள் மூலம் பரவாது – மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்வு : கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 724ஆக உயர்வு.

சென்னையில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 2114 பேர் கண்காணிப்பு.

கொரோனா பாதிப்பு காரணமாக திருச்சியில் 4120 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொழில் நிறுவனங்கள், வங்கி வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வாய்ப்பு.ஏற்கனவே வங்கிகள் கொடுத்த கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க இயலும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ்.

அரசு மற்றும் தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பவர்களின் பணத்திற்கு முழு பொறுப்பு வழங்கப்படும் : ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ்.

சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.கொரோனா வைரசால் ஏற்படும் பின்னடைவை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது : ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ்.

கடன் செலுத்தாததால் திவால் நடவடிக்கையை மேற்கொள்ளவும் கூடாது – ரிசர்வ் வங்கி.

மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 3,625 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் தகவல்.

ரூ.1.70 லட்சம் கோடி நிவாரணம் அறிவிப்பு – பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு ராகுல் காந்தி பாராட்டு.

கேரளாவில் நியாயவிலைக் கடையிலிருந்து பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வதற்காக சொமேட்டோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மொபைல் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என செல்போன் நிறுவனங்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழக லாரி ஓட்டுநர்கள், கிளீனர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய டிடிவி தினகரன் வலியுறுத்தல்.

நடிகரும் மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் காலமானார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸிற்கு பலியானோர் எண்ணிக்கை 944 பேர் அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம் – பாதுகாப்பு சாதனம் தயாரிக்கும் இந்தியன் ரயில்வே.

Facebook Comments

Related Articles

Back to top button