
சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக வலம் வந்த நடிகை ‘சித்ரா’ சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.
இவரது இழப்பு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குறுகிய காலத்தில் தனது உழைப்பால் லட்சக்கணக்கான ரசிகர்களை தன்வசம் இழுத்தவர் சித்ரா.
வெள்ளித்திரையில் முதலும் கடைசியுமாக ஒரு படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
Infinite pictures தயாரிப்பில் “கால்ஸ்” என்ற திரைப்படத்தில் தான் சித்ரா நடித்துள்ளார்.
டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, வினோதினி, ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஜெ.சபரீஸ் என்பவர் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
Facebook Comments




