
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை தடுக்க மத்திய அரசும் மாநில அரசும் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து தாக்கம் இருந்து கொண்டு இருக்கிறது. சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற மண்டலம் வாரியான விபரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 27 பேருக்கும், திருவிக நகர் மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் தலா 14 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 12 பேருக்கும், தேனாம்பேட்டையில் 10 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், தண்டையார் பேட்டையில் 7 பேருக்கும், வளசரவாக்கம் மற்றும் பெருங்குடியில் தலா 4 பேருக்கும், திருவொற்றியூர், மாதவரம், அடையாறில் தலா 3 பேருக்கும், சோழிங்கநல்லூர், ஆலந்தூர் பகுதிகளில் தலா 2 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.