Spotlightஇந்தியா

கொரோனா நிவாரணமாக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!

லகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்தியாவும் இந்த வைரஸால் பெரிதும் பாதிக்கப்படு வருகிறது. 21 நாள் ஊரடங்கு உத்தரவை இந்தியா முழுவதும் பிறப்பித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

இதனைத் தொடர்ந்து நிவாரண நிதியை அறிவித்திருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அவை,

80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை அடுத்த மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும்

மருத்துவர்கள் செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கப்படும்

ஏழைகள் தொழிலாளர்களுக்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு

வீடுகள் தோறும் மூன்று மாதங்களுக்கு 1 கிலோ பருப்பு வழங்கப்படும்

100 நாள் வேலைத்திட்டத்தில் கூடுதலாக 2,000 ரூபாய் வழங்கப்படும்

முதியவர்கள் விதவைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்

ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு 500 ரூபாய் வழங்கப்படும்

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும்.

என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button