
கடந்த 7ம் தேதி ஆடியோ, டிரைலர் வெளியிடப்பட்ட டப்பாங்குத்து திரைப்படம், யூடியூபில் குறுகிய நாட்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
மருதம் நாட்டுப்புற பாடல்கள் தயாரிப்பில் S.ஜெகநாதன் தயாரிக்கும் படம் டப்பாங்குத்து. இதன் இசையை திண்டுக்கல் ஐ.லியோனி வெளியிட்டார்.15 நாட்டுப்புற பாடல்கள் இடம் பெற்ற மதுரை வட்டார தெருக்கூத்து கலையை மையமாக கொண்டு வெளிவரும் இத்திரைப்படத்தில் பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு புகழ் சங்கரபாண்டி, தீப்தி, துர்கா போன்றோர் நடித்துள்ளார்கள்.
இயக்கம், பாடல்கள் R.முத்துவீரா, கதை, திரைக்கதை, வசனம் :S.T.குணசேகரன் இசை:சரவணன், ஒளிப்பதிவு : ராஜா, K.பக்தவத்சலம், நடனம் : தீனா, கலை : M.சிவாயாதவ், படத்தொகுப்பு : D.S.லக்ஷ்மணன், மக்கள் தொடர்பு : எஸ்.செல்வரகு, சண்டை பயிற்சி : ஆக்சன் பிரகாஷ், நாதன் லீ, ஸ்டில்ஸ் : வின்சென்ட், தயாரிப்பு நிர்வாகம் : சின்னம