
இயக்கம்: ஆர் அரவிந்தராஜ்
நடிகர்கள்: ஜே எம் பஷீர் , பாரதிராஜா, ராதாரவி,, எம்.எஸ். பாஸ்கர், வாகை சந்திரசேகர், ஆர்வி உதயகுமார்
தயாரிப்பு: எஸ் எஸ் எஸ் ஆர் சத்யா, ஜெனிபர் மார்க்ரெட்
இசை: இளையராஜா
பசும்பொன் முத்துராமலிங்க தேவரை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது. அவரது வாழ்க்கையில் அவர் செய்த சேவை, போராட்டம், அரசியல் பார்வை, அரசியலில் பங்களிப்பு, சந்தித்த வழக்குகள், சந்தித்த பிரச்சனைகள், சிறைவாசம் உட்பட அவர் பயணித்த வாழ்க்கை குறித்து இப்படம் விவரிக்கிறது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவராக திரையில் தோன்றியிருக்கிறார் பஷீர். அந்த லுக்கை அப்படியே திரைக்கு கடத்தியதோடு மட்டுமல்லாமல், நடிப்பிலும் அப்படியே தோன்றி அசத்தியிருக்கிறார்.
சிறையில் படும் இன்னல்கள், அரசியல் தலைவர்களுக்கும் முத்துராமலிங்க தேவருக்குமிடையேயான பிணைப்பு, என படத்தில் தோன்றிய காட்சிகள் அனைத்தும் ரியலாக பார்ப்பது போன்ற ஒரு உணர்வைக் கொடுத்துவிட்டார் இயக்குனர்.
இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருக்கிறது.
பாரதிராஜா, ராதாரவி,, எம்.எஸ். பாஸ்கர், வாகை சந்திரசேகர், ஆர்வி உதயகுமார் உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அழகாக செய்து முடித்திருக்கின்றனர்.
முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையை முழுதாக பார்க்க வேண்டுமென்றால் இப்படத்தை பார்த்தாலே போதுமானது என்ற உணர்வு படம் பார்த்த அனைவருக்கும் ஏற்படும்.





