Spotlightசினிமாவிமர்சனங்கள்

என் பெயர் ஆனந்தன் – விமர்சனம்

நாயகன் சந்தோஷ் பிரதாப், படத்தில் ஒரு இயக்குனர். நான்கு குறும்படங்களை இயக்கி, ஒரு பெரும் ஹீரோவை வைத்து மிகப்பெரும் பொருட் செலவில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை பெறுகிறார்.

தனது கனவு, நிறைவேற போவதை நினைத்து மகிழ்ச்சியில் இருக்கிறார் சந்தோஷ்.

முதல் நாள் படப்பிடிப்பிற்கு தனது வாகனத்தில் செல்கிறார் சந்தோஷ், அப்போது காரில் மறைந்திருந்த நபர் ஒருவர் சந்தோஷை தாக்கிவிட்டு அவரை கடத்திச் செல்கிறார்.

படப்பிடிப்பு நின்று விடுகிறது. சந்தோஷ் ஏன், எதற்காக கடத்தப்பட்டார்..? கடத்தியவர்கள் யார்.? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் சந்தோஷ் பிரதாப் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தீபக் பரமேஷ், அரவிந்த் ராஜகோபால் இருவரும் தேர்ந்தெடுத்த நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஆங்காங்கே எட்டிப் பார்த்துச் செல்லும் கதாபாத்திரம் தான் அதுல்யா ரவிக்கு.

இரண்டாம் பாதியில் தெருக்கூத்து ஃப்ளாஷ் பேக் காட்சிகள் மிகச் சிறப்பான முறையில் எடுக்கப்பட்டதுக்கு இயக்குனருக்கு வாழ்த்துகள்.

இன்றைய தெருக்கூத்து கலைஞர்கள் படும்பாடு, அவர்களின் நிலை என இறுக்கமான மனதோடு அவர்களின் வாழ்வியலை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர்.

உலக சினிமாவை அப்புறம் பார்த்துக்கலாம், முதலில் உள்ளூர் சினிமாவை, உள்ளூர் கலைஞர்களை வாழ வையுங்கள் என்பதை ஆணித்தனமாக ஒரு கருத்தை உள்ளடக்கியுள்ளார் இயக்குனர்.

வாழ்வியலான கதை தான் என்றும் வெற்றி பெறும், உலகம் அதை திரும்பி பார்க்கும் என்பதையும் இயக்குனர் சொல்ல மறக்கவில்லை….

தெருக்கூத்து கலைஞர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தை, சரியான முறையில், தெளிவான நடையோடு படம் முழுக்க கூறியிருந்தால் இன்னும் சிறப்பான ஒரு படமாக இது அமைந்திருக்கும்.

ஒளிப்பதிவு : மனோ ராஜாவின் ஒளிப்பதிவு கலர் ஃபுல்…

ஜோஸ் பிராங்க்ளினின் இசையில் தெருக்கூத்து காட்சிகளில் பின்னனி இசை, பாடல் அற்புதம்.

டைரக்சன் – ஸ்ரீதர் வெங்கடேசன்

தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை மட்டும் குறி வைத்து இயக்ககூடிய திறமை இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசனுக்கு இருப்பதை இப்படம் மூலம் காண முடிந்தது..

இயக்குனருக்கு வாழ்த்துகள்…

Facebook Comments

Related Articles

Back to top button