Spotlightதமிழ்நாடு

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்திதான் – அமைச்சர் வேலுமணி!

மிழகம் முழுவதும் கோடை வெயில் மக்கள் அனைவரையும் வாட்டி வதைக்கும் இவ்வேளையில் குடிநீர் தட்டுப்பாடும் மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் முடக்கியுள்ளது.

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து நாளுக்கு நாள் ஊடகம் வாயிலாக அறிந்து கொண்டுதான் இருக்கிறோம்.,

இந்நிலையில், தண்ணீர் பஞ்சம் குறித்து பேச முதலமைச்சர் தலைமையில் அமைச்சர் வேலுமணி, உதயகுமார் பங்கேற்க தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இதில், முக்கிய அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளரகளை சந்தித்த அமைச்சர் வேலுமணி பேசும் போது, ‘ தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் என்ற ஒன்று இல்லவே இல்லை. இது வெறும் வதந்திதான்.

மழை பெய்யாதது இயற்கையானது. எதிர்கட்சிகளை விட நாங்கள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து 90 மில்லியன் லிட்டர் தண்ணீரை தொழிற்சாலைகளுக்கு வழங்க இருக்கிறோம்.’ என்று கூறினார்.

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் : அமைச்சர் வேலுமணி தலைமையில் ஆலோசனை

Facebook Comments

Related Articles

Back to top button