
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க அதிவேகமாக உருவாகி வருகிறது அசுரன். இப்படத்தில் தனுஷ் டபுள் ஆக்ஷனில் நடித்து வருகிறாராம்.
தனுஷிற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். ஜி வி பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார்.
பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இப்படத்தின் வெளியீட்டு தேதியை சற்று நேரத்திற்கு முன்பு தனுஷ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இப்படத்தினை வரும் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
Facebook Comments