
தருமபுரி, பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த மூன்று பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2000ம் ஆண்டு குற்றவியல் வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அதிமுக’வினர் தமிழகம் முழுவதும், வன்முறையில் ஈடுபட்டனர். தர்மபுரியில், கோவை விவசாய பல்கலை பஸ்சுக்கு, தீ வைத்தனர். பஸ்சில் பயணித்த, மூன்று மாணவியர், தீயில் கருகி சாம்பலாகினர்.
இதனையடுத்து இச்செயலில் ஈடுபட்ட நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோர், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு தூக்கு தண்டனையினை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
ஆனால் 2006ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது.
இதனையடுத்து, 1,800 கைதிகளை, எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி, நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய, தமிழக அரசு முடிவு செய்தது. இந்த பட்டியலில் இந்த மூவர் பெயரும் இடம்பெற்றுள்ளது.
அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக, சட்ட நிபுணர்களுடன், கவர்னர் கலந்தாலோசித்தார். அதன்பின், மறுபரிசீலனை செய்யும்படி, அரசுக்கு அறிவுறுத்தினார்.
ஆனால், தமிழக அரசு, அவர்களை விடுவிக்க கோரி, மீண்டும் கவர்னருக்கு, கோப்புகளை அனுப்பியது. இச்சூழ்நிலையில், மூன்று பேரையும் விடுவிக்க கவர்னர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்து இன்று விடுதலை செய்யப்பட்டனர்.




