Spotlightவிமர்சனங்கள்

தூள்பேட் இணையத் தொடர் – விமர்சனம் 3.5/5

யக்கம்: ஜெ ஜெஸ்வினி

நடிகர்கள்: அஷ்வின் குமார், குரு லக்‌ஷ்மணன், பாடினி குமார், ஸ்ரீதுகிருஷ்ணன், ப்ரீத்தி ஷர்மா, செளந்தர்யா, ரவிவர்மா, பிர்லா போஸ், விஸ்வா மித்ரன், சுரேந்தர் விஜே, ரஞ்சனா, சுலைமான்

தயாரிப்பு நிறுவனம்: பேரபிள் பிக்சர்ஸ்

தயாரிப்பாளர்கள்: தேவன் சார்லஸ், பி பிரவீன்குமார், சரண்யா வீரமணி

ஒளிப்பதிவு: என் எஸ் சதீஷ்குமார்

இசை: அஸ்வத்

படத்தொகுப்பு சாம் ஆர்டிஎக்ஸ்

கதைப்படி,

தூள்பேட் நகரில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் புதிதாக அசிஸ்டெண்ட் கமிஷ்னராக பதவியேற்க வருகிறார் அஸ்வின் குமார். இரவு நேரத்தில், தனியார் லாட்ஜ் ஒன்றில் அன்றிரவு தங்குகிறார் அஷ்வின்.

போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் பாடினிகுமாருக்கு ஒரு சில துக்க நிகழ்வு கண்முன்னே வந்து செல்கிறது. அன்றிரவே மூன்று தலைகள் அந்த ஊரில் விழப்போவதாக அவருக்கு வந்து செல்கிறது.. இவருக்கு ஒரு நினைவு வந்தால் அது அப்படியே நடந்துவிடும் என்று நம்புகிறார்கள்.

இதனை நினைத்து கலங்கி நிற்கிறார் பாடினி குமார். இந்நிலையில், இரவு முடிந்து விடிய, அந்த ஊர் பெரிய ரெளடி ஒருவரை மற்றொரு கும்பல் கொன்று தலை துண்டித்துவிடுகிறது.

அடுத்தபடியாக, குப்பை மேட்டில் பாதி எரிந்தும் எரியாமலும் ஒரு பெண்ணின் தலை கிடைக்கிறது. அதனைத் தொடர்ந்து மீன் ஏற்றிச் செல்லும் வண்டியில் இருந்து கீழே விழும் பெட்டியில் ஒரு இளம் பெண்ணின் தலை கிடைக்கிறது.

பாடினிகுமார் கனவு கண்டது போலே, மூன்று கொலைகள் நடந்து விடுகிறது. அடுத்த நாள் தூள்பேட் காவல்நிலையத்தில் அசிஸ்டெண்ட் கமிஷ்னராக ஜார்ஜ் எடுக்கிறார் அஷ்வின்.

கொல்லப்பட்டவர்கள் யார்.?? எப்படி இந்த கொலைகள் நடந்தது.??? என்பதை தனது பாணியில் விசாரணையை மேற்கொள்கிறார் அஷ்வின். இறுதியில் அதனை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே இந்த தொடரின் மீதிக் கதை.

இது ஒரு வெப் தொடராக ஆஹா தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டு எபிசோடுகள் வெளியான நிலையில், தொடரில் நடித்த நடிகர்கள் தேர்வை மிகவும் தனித்துவமாக தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.

போலீஸ் ஸ்டேஷனை காட்டிய விதம், போலீஸ் உயரதிகாரி தூள்பேட் நகரத்தை பற்றி கொத்த பில்-டப், ஸ்டேஷனில் நடந்த பூஜை என தொடரின் ஆரம்பத்திலேயே நம்மை கதையோடு நகர வைத்துவிட்டார் இயக்குனர்.

ஒவ்வொரு ஃப்ரேமிலும் அஷ்வின் குமாருக்கு கொடுக்கப்பட்ட பில்-டப் காட்சிகள், அதற்காக அவர் கொடுக்கும் மெனக்கெடல்கள், அவரை காட்சிப்படுத்திய விதம் என ஒளிப்பதிவும் பெரிய பங்கு கொண்டுள்ளது.

அஷ்வின் குமாரின் ப்ளாஷ் பேக் காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் சஸ்பென்ஸ், இரண்டு பெண் தலைகள் என தொடரில் அதிரடியான சஸ்பென்ஸ் காட்சிகள் ஒழித்து வைக்கப்பட்டிருக்கின்றன. வரும் தொடர்களில் அந்த முடிச்சுகளுக்கெல்லாம் நிச்சயம் தீர்வு கிடைக்கும்.

காட்சிகள் ஒவ்வொன்றும் நகர நகர நம்மையும் கதையோடு நகர்த்திச் செல்ல வைத்துவிடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்போடு நம்மை சீட்டின் நுனியில் அமர வைத்துவிடுகிறார் இயக்குனர். பாடினி குமாரின் படபடப்பான ரியாக்‌ஷன்கள், இன்ஸ்பெக்டரின் போல்ட்னஸ், காதல் கதை, ரெளடி கும்பல் என காட்சிகளுக்கு காட்சி பல திருப்புமுனைகள் எட்டிப் பார்க்கின்றன.

மேலும், வசனங்களில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தலாம். பின்னணி இசை மற்றும் காதலர்களுக்கான பாடல் என இரண்டிலும் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார் இசையமைப்பாளர்.

மூன்று தலைகளை காட்சிப்படுத்திய விதத்தில் ஒளிப்பதிவாளர் தனது திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியுள்ளார்.

மொத்தத்தில்

தூள்பேட் – ஒன் ஆஃப் தி பெஸ்ட் த்ரில்லர் தொடரில் நிச்சயம் இது முக்கிய பங்கு வகிக்கும்…

Facebook Comments

Related Articles

Back to top button