Spotlightசினிமா

’ஹப்பி எண்டிங்’ தான் கதையே; தாதா 87 பட அடுத்த அதிரடி ‘PUBG’!

சாருஹாசனின் நடிப்பில் வெளிவந்த வெற்றி பெற்ற படம்தான் ’தாதா 87’. இப்படத்தினைத் தொடர்ந்து அவர் இயக்கும் அடுத்த படம் பொல்லாத உலகில் பயங்கர கேம்(PUBG).

காமெடி திரில்லரான இப்படத்தில், தமிழ் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினா நடிக்கிறார். இவரைத் தவிர மேலும் இந்த படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

பப்ஜிங்குற கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் க்ரைம் ப்ரான்ச் ஆபிஸராக நடிக்கிறார். ஜூலியும் தாதா கதிரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

படத்தோட கதையை பற்றி இயக்குனர் கூறுகையில், “பப்ஜி கேம் மாதிரி அஞ்சு பேரு ஒரு கேம் விளையாடுறார்கள். ஜெயிச்சவங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கு. அது (happy ending). அது அவர்களை வாழ்க்கையை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பது தான் படம். திரையில நடிக்காமல் ஒதுங்கி இருக்கும் பல சிறந்த பழைய நடிகர்களை நடிக்க வைக்கவும் ஏற்பாடு செய்து வருகிறேன்’ என்றார்.

மேலும் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த நடிகர் அம்சவர்தனை வைத்து பீட்ரு என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button