
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது.
பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள இந்த தேர்தல், திமுக-விற்கு பெரும் சவாலான தேர்தலாக பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக எடுத்து வைத்து கள வேலைகளை மிகவும் மும்முரமாக செய்து வருகின்றனர் உடன்பிறப்புகள்.
இந்நிலையில், ஏபிபீ என்ற செய்தி நிறுவனம் சமீபத்தில் சர்வே ஒன்றை தமிழகத்தில் எடுத்தது.. அடுத்த ஆட்சியை பிடிப்பது யார் .? என்ற சர்வே அது.
அதில், திமுக அமோக வெற்றி பெறும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக மட்டும் சுமா 154 முதல் 162 தொகுதிகளை பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக-விற்கு 58 முதல் 66 சீட்டுகள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வேயை கண்ட உடன் பிறப்புகள் மேலும் உற்சாகமடைந்து தேர்தல் பணிகளை இன்னும் படுவேகமாக செய்து வருகின்றனர்.