
துல்கர் சல்மான் நடிப்பில், இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ (AOT) திரைப்படத்தின் தமிழ் பத்திரிகையாளர் சந்திப்பு நவம்பர் 17-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.
கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா நிறுவனங்கள் வழங்கும் இப்படத்தை லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குன்னம், ரம்யா குன்னம் தயாரித்துள்ளனர். துல்கர் சல்மானுடன் ஸ்ருதி ஹாசன், அறிமுக நடிகை சாத்விகா வீரவல்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
பெண்களின் கனவுகளும் குடும்பத்தின் ஆதரவும்!
ஒரு கிராமத்தில் பிறந்த பெண் தனது கனவுகளை அடைய மேற்கொள்ளும் முயற்சிகளையும், அதற்கு குடும்பத்தினர் அளிக்கும் ஆதரவையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய துல்கர் சல்மான், ‘சீதா ராமம்’ படத்திற்குப் பிறகு இந்தக் கதையைக் கேட்டதாகவும், கதாநாயகியை மையமாகக் கொண்ட கதை என்றாலும் அதன் மீது ஏற்பட்ட நம்பிக்கையால் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பேசுகையில், இந்திய சினிமாவின் முக்கியமான நவீன கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக இப்படம் அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் பேசும்போது, ஒரு பெண்ணின் கனவுகளையும் அதை அடைய அவளுக்குக் கிடைக்கும் ஆதரவையும் உணர்வுப்பூர்வமாக இப்படம் எடுத்துரைக்கும் என்றார்.
அறிமுக நடிகை சாத்விகா வீரவல்லி, துல்கர் சல்மானுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்றும், தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகியுள்ள ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ திரைப்படம் நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.





