
15,000 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் பேசும்போது,’ முதற்கட்டமாக 1500 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன்
தமிழகத்தில் ஆய்வு நடத்த விரைவில் மத்திய குழு வரும்.
மத்தியகுழு புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என பிரதமரிடம் கோரினேன்
மத்திய குழுவை விரைவில் தமிழகத்திற்கு அனுப்பி வைப்பதற்கு பிரதமர் உறுதி அளித்துள்ளார்
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 63 ஆக உயர்வு
7 லட்சத்து 41 ஆயிரத்து 870 ஓடுகள் புயலால் பாதிக்கப் பட்டுள்ளன
1 லட்சத்திற்கும் அதிகமான மின் கம்பங்கள் சேதம் பகுதி சேதமடைந்தன
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.’ எனவும் கூறினார்.
Facebook Comments