Spotlightவிமர்சனங்கள்

நமக்கு நாம் – விமர்சனம்

வாழத்தவிக்கும் பெற்றோர்கள் இல்லாத குழந்தைகளையும் ஆதவற்ற முதியோர்களையும் தன் சக்தி ஆதரவு இல்லத்தில் வைத்து காப்பாற்றி வருகிறார்
சமூக போராளி சுந்தரமூர்த்தி.

இந்த காப்பகம் ஒரு வாடகை கட்டிடம் என்பதால் அவர்களை பாதுகாப்பதும் வாடகை கொடுப்பதற்கும் மிகவும் சிரமப்படுகிறார்.

தன் மனைவி சுனிதாவுடன் தெரு தெருவாக அலைந்து நன்கொடை பெற்று காப்பகத்தை வழி நடத்தி வருகிறார். ஒரு சில இடங்களில் பணம் கிடைத்தாலும் பல இடங்களில் அவமானமே மிஞ்சுகிறது.

இதனிடையில் இவர்களது மகள் ஐரீன், வசந்த் என்பவரை காதலிக்கிறார்.

ஆனால் தந்தைக்கு அந்த காதல் பிடிக்கவில்லை என்பதால் அந்த காதலையும் துறக்கிறார். எனவே காதலன் தற்கொலை செய்துக் கொள்கிறார்.

காப்பகத்தில் சமையல்காரனாக வேலை செய்யும் ஹாஜா, அங்குள்ள மளிகை சாமான்களை திருடி வெளியே விற்று சம்பாதிக்கிறார். மேலும் தன்னிடம் நெருக்கம் காட்டும் பெண்களுக்கும் கொடுக்கிறார்.

இது தெரியாத காப்பக நிறுவனர் சுந்தரமூர்த்தி மளிகை பொருட்களை வாங்கி கொடுத்தே தன் வசதியை இழக்கிறார்.

ஒரு கட்டத்தில் காப்பகத்தை காலி செய்ய சொல்கிறார் அந்த இடத்து உரிமையாளர். அதற்கான காலக்கெடுவும் விதிக்கிறார்.

எனவே அவசர அவசரமாக சில நல்ல உள்ளங்களின் உதவியால் வேறு ஒரு இடத்தில் கட்டிடம் கட்டுகிறார் சுந்தரமுர்த்தி.

கட்டிட வேலைகள் முடியும் தருவாயில் தான் அந்த இடத்திற்கு அரசு அனுமதியில்லை என்ற விவரம் சுந்தரமூர்த்திக்கு தெரிய வருகிறது. எனவே அந்த கட்டிடத்தை அரசாங்கம் இடிக்கிறது.

இதற்குள் காப்பகம் இடத்து உரிமையாளர் கொடுத்த தேதி முடிவடைந்துவிட்டது.

எனவே 100க்கும் மேற்பட்ட காப்பகத்து குழந்தைகளை முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ காப்பக நிறுவனங்களில் சேர்க்கின்றனர்.

ஆனால் அந்த காப்பகத்தில் இளம் பெண்களை சேர்க்க முடியாது என்கிறார்கள்.

எனவே தன்னிடம் உள்ள 5 இளம் பெண்களை எங்கு சேர்ப்பது? எப்படி பாதுகாப்பது என தெரியாமல் தவிக்கிறார் சுந்தரமூர்த்தி.

இதற்குள் ஒரு கும்பல் இவர்களின் நிலை தெரிந்து உதவ வருகிறது. ஆனால் இறுதியாக தான் அவர்கள் உதவ வரவில்லை. அந்த இளம் பெண்களை விலை பேசி விற்க வந்துள்ளார்கள் என்ற விவரம் சுந்தரமூர்த்திக்கு தெரிய வருகிறது.

எனவே தன் மகள்களைப் போல் பாவிக்கும் அந்த 5 பெண்களை காப்பாற்ற கும்பலை சேர்ந்த 2 ஆண்களுடன் போராடுகிறார்.

இறுதியில் அவர்களை கொலையும் செய்துவிடுகிறார் சுந்தரமூர்த்தி.

அதன்பின்னர் என்ன ஆனது? இளம் பெண்கள் என்ன ஆனார்கள்? போலீஸ் சுந்தரமூர்த்தியை கைது செய்ததா? அவர் தப்பித்தாரா? காப்பகம் நபர்கள் என்ன ஆனார்கள்? என்பதே மீதிக்கதை.

கதாபாத்திரங்கள்

புரட்சி வேந்தன் சுந்தரமூர்த்தி கதை, திரைக்கதை எழுதி இயக்கி தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவரது மனைவியாக சுனிதா நடித்துள்ளார்.

இவர்களின் மகளாக ஐரீன், போலீஸ் அதிகாரியாக சுபாஷினியும் நடித்துள்ளனர்.

காப்பகத்தில் உள்ள சமையல்காரராக ஹாஜா சரீப் மற்றும் சக்தி ஆதரவு இல்ல குழந்தைகள் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ஒரு பாடல் காட்சியில் பா. விஜய் மற்றும் மரண கானா விஜி நடித்துள்ளனர்.

காப்பகத்தைச் சேர்ந்தவர்களே படத்தில் நடித்துள்ளனர். எனவே சினிமாத்தனம் இல்லாமல் நாடகத் தன்மையுடன் படம் இருக்கிறது.

சேகர் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங்கை அண்ணாதுரை செய்துள்ளார்.

தினா இசையமைத்துள்ளார்.

இறுதியாக அனாதைகள் இல்லாத சமுதாயத்தை அனைவரும் உருவாக்குவோம் என்ற சமூக சிந்தனையுடன் படத்தை முடித்துள்ளார்.

நமக்கு நாம் -. தாரக மந்திரம்

Facebook Comments

Related Articles

Back to top button