Spotlightசெய்திகள்விளையாட்டு

தனது சாதனையை தானே முறியடித்த இங்கிலாந்து … 481 ரன்கள் குவித்தது!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 481 ரன்கள் எடுத்து தனது முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிகபட்சமாக 92 பந்துகளில் 147 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சதத்தைக் கடந்த இன்னொரு வீரரான ஜானி பைர்ஸ்டோ 139 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதற்கு முன்பு 2016இல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இங்கிலாந்து மூன்று விக்கெட் இழப்புக்கு 444 ரன்கள் எடுத்திருந்ததே முந்தைய உலக சாதனையாக இருந்தது. அந்தப் போட்டியும் இதே மைதானத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button