சென்னை : குட்கா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் குட்கா விவகாரத்தில் ஊழல் நடந்தது உண்மை தான் என்றும் அதில் தனக்கு எந்த வித சம்மந்தமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் துணை ஆணையராக இருந்த ஜெயக்குமார் மீது பல்வேறு குற்றசாட்டுகளை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் காவல்துறை அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு மாறுதல் உத்தரவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் குற்றச்சாட்டப்பட்ட ஜெயக்குமார் தற்போது விழுப்புரம் எஸ்.பி யாக உள்ளார். அவர் விரைவில் மாற்றப்படுவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
Facebook Comments