
தனுஷ் நடிப்பில் 2011ஆம் ஆண்டில் வெளியான மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை “ஹன்சிகா மோத்வானி”.
அதற்கு முன் ஹிந்தி, கனடா, தெலுங்கு என மற்ற மொழிகளில் சில படங்களில் நடித்திருந்தார்.. மாப்பிள்ளை படத்திற்குப் பிறகு எங்கேயும் காதல், விஜய்யின் வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, மான்கராத்தே என இவர் நடிப்பில் வந்த படங்கள் அனைத்தும் ஓரளவிற்கு நல்ல மார்கெட்டை பெற்றுத் தந்தது.
இந்நிலையில், அதன்பிறகு ஹன்சிகா நடிப்பில் வெளிவந்த புலி, ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, மனிதன், போக்கிரி ராஜா, போகன், சிங்கம் 3, குலேபகவாலி, துப்பாக்கி முனை, 100, மஹா என வெளிவந்த படங்கள் அனைத்துமே படுதோல்வியை சந்தித்தன.
தனது க்யூட்டான சிரிப்பாலும், நடிப்பாலும் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்த ஹன்சிகாவிற்கு, அடுத்தடுத்த தோல்வியால் தமிழ் சினிமா ஹன்சிகாவை ஒதுக்கி வைத்தது…
இனியாவது நடிக்கும் படங்களின் கதைகளை கவனமுடன் தேர்வு செய்வாரா.? என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
வரும் வெள்ளியன்று (7-7-23) ஆதி, பலாக் லல்வானி, ஹன்சிகா நடிப்பில் உருவாகியிருக்கும் “பாட்னர்” திரைப்படம் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
என்னடா இது “புலி பட நாயகிக்கு” வந்த சோதனை….